காகிதப் பூக்களும் மணக்கட்டும்! 2024 டி.வி.ஆர் நினைவுச்சிறுகதை போட்டி ஆறுதல் பரிசுக்கதை
காகிதப் பூக்களும் மணக்கட்டும் ! நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு . திருச்சி - சென்னை அதிவிரைவு புறவழிச்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது ரிணால்ட் டஸ்டர் சொகுசு கார் . உள்ளே முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் காதுகளில் இயர் பேட் அணிந்துகொண்டு கண்களை மூடி இளையராஜாவின் இசையை ரசித்துக் கொண்டிருந்தான் . சென்னையை நெருங்கிக்கொண்டிருந்த அந்தக் கார் பரணூர் சுங்கச்சாவடி வந்ததும் வேகத்தைக் குறைத்து மெதுவாக வேகத்தடைகளில் ஏறி இறங்கி ஊர்ந்து செல்ல காரின் கண்ணாடிக் கதவைத் தட்டியது வளையல் அணிந்த கரம் ஒன்று . திருநங்கைகள் சிலர் வரும் கார்களை நிறுத்தி பணம் வாங்கிக் கொண்டிருந்தனர் . அதில் ஒருத்திதான் இளைஞன்வந்த காரின் ஜன்னலை தட்டியவள் . அவள் மீண்டும் ஜன்னலைத்தட்ட காரின் விண்டோ ஓப்பன் ஆக அந்த திருநங்கை கையை உள்ளே நீட்டினாள் . ” எதுக்கு காசு கேட்கறீங்க ? இப்படி பிச்சை எடுப்பது உங்களுக்...