ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் நூல் விமர்சனம்
ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் சிறுகதை எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஜூனியர் தேஜ் என்ற வரதராஜன் அவர்கள் தான் பல பத்திரிகைகளில் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 5 பாகங்களாக புஸ்தகா டிஜிட்டல் மீடியா பதிப்பகம் வெளியிட்டுள்ளார். 130 முதல் 150 பக்கங்களுக்குள் உள்ள இந்த தொகுப்பு நூல்களின் வடிவமைப்பும் எழுத்துருவும் அருமையாக முதியோர்களும் வாசிப்பதற்கு ஏதுவாக பெரிய எழுத்தில் உள்ளது. ஒவ்வொரு தொகுப்பிற்கும் நமக்கு அறிமுகமான பிரபல எழுத்தாளர்கள் சிறப்பான வாழ்த்துரை வழங்கி நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றனர். நான் வித்தியாசமாக இந்த தொகுப்பின் 5 ம்பாகத்தை ( குணசீலத்துக் கதைகள்) முதலில் வாசித்தேன். மனம் உடைபடுகையில் அதுவே ஆழ்ந்த ரணமாகி இளகிய மனம் கொண்டவர்களை மனநோயாளி ஆக்கிவிடுகின்றது. மனநோய்க்கு சூழ்நிலையும் பயமும் தன்னம்பிக்கை குறைதலும் ஆகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஓர் மனநோய் உள்ளது. அதை சிலர் வெளிப்படுத்துகையில் பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டிவிடுகிறோம். இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளும் உளவியல் ரீதியாக நன்கு அலசி ஆராயப்பட்டு நல்ல தீர்வினையும் வழங்குகிறது. ஆசிரியர் ஓர்...