Posts

Showing posts from May, 2021

அஞ்சாயிரம் ரூபாய்!

Image
  அஞ்சாயிரம் ரூபாய் !                                               நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு   விடிந்தும் விடியாதப் பொழுதில் புழக்கடையில் பல் விளக்கிக் கொண்டிருந்தபோது அந்த குரல் கேட்டது ” கடைசியிலே அவ செத்தேப் போயிட்டாளாங்க !”   ” என்னது ? இப்படி மொட்டையா சொன்னா எப்படி ? யாரு ..? அப்பா கேட்க ” நம்ம ” முத்தம்மா ” ங்க !” ” வேலைக்காரி முத்தம்மாவா ? ” நம்ப முடியாமல் கேட்டார் அப்பா . அவசரமாய் முகம் கழுவிக் கொண்டு சமையல்கட்டில் நுழைந்தேன் . காபி போட்டுக் கொண்டிருந்த அம்மா ,” பாவம்டா ! முத்தம்மா செத்துட்டாளாம் ! ” என்றாள் . ” அப்போ என் ஐயாயிரம் ரூபா அவ்ளோதானா ?”   அதிர்ச்சியாக கேட்டேன் . ” ஆமாம்டா ! அவ உனக்கு ஐயாயிரம் தரணும் இல்லே …! பாவி , சண்டாளன் ..! அவ பையன் நம்ப வைச்சு வாங்கிட்டுப் போனான் ...