Posts

Showing posts from 2021

மன்னித்துவிடு மணிமொழி!

Image
  மன்னித்துவிடு மணிமொழி! அவன் அப்படி செய்வான் என்று கொஞ்சம் கூட மணிமொழி நினைத்துக்கூட பார்க்கவில்லை! பரபரவென உள்ளே வந்த்தும் யார் இருக்கிறார்கள் என்ன ஏது என்று ஒன்றைக்கூட பார்க்கவில்லை! என்னை மன்னித்துவிடு மணிமொழி! என்று சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்துவிட்டான்.   அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுவரவே ஒருநிமிஷம் ஆகிவிட்ட்து மணிமொழிக்கு. ஆனாலும் சுதாரித்துக் கொண்டாள். “என்ன ..என்னங்க இது! முதல்லே எழுந்திருங்க!” என்றாள். பக்கத்து அறையில் அவனது மாமனாரும் மாமியாரும் ஏதோ குசுகுசுவென பேசிக்கொள்வது காதில் விழுந்தது. அதை சிறிதும் லட்சியம் செய்யாமல், ”மணிமொழி முதல்லே நீ என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தைச் சொல்லு! அப்போதான் எழுந்திருப்பேன்!” என்றான் மகேஷ். மணிமொழியின் கணவன்.   “உங்களை எதுக்கு மன்னிக்கனும்?” என் பேர் எல்லாம் இன்னும் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? முதல்லே எழுந்திருங்க! ஏதோ சி எம் கால்லே விழற அமைச்சருங்க மாதிரி என் கால்லே விழுந்திருக்கீங்க என்றாள் மணிமொழி நக்கலாக.  தடாலடியாக விழுந்தவன் தடாலடியாக எழுந்தான். இ..இந்த நக்கல்தான்  நம்மளை பிரிச்சது… அது மட்டும்.. ...

நாகினி- சிறுகதை

Image
  நாகினி !       நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு .   ( திரு கணேஷ்பாலா ஓவியக்கதைப் போட்டி சீசன் 6க்கு எழுதிய கதை) ஒரு வாரமாய் உட்கார்ந்து மேட்ரிமோனியல் தளங்களில் வந்திருந்த ஜாதகங்களை அலசிக்கொண்டிருந்தான் சதீஷ் . முப்பதுகளை கடந்த சாப்ட்வேர் இஞ்ஜினியர் . லகரங்களில் சம்பளம் வாங்கினாலும் பெண் கிடைத்தபாடில்லை . தரகர் மூலமும் தெரிந்தவர்களிடம் , சொந்த பந்தம் என்று விசாரித்து அவனது தாய் எத்தனையோ பெண்களைப் பார்த்தாயிற்று .    எல்லாம் பொருந்தி வந்தாலும் ஏதோ ஒன்று குறைசொல்லி அவனை தட்டிக் கழித்தனர் பெண்கள் . வெறுத்துப் போன சதீஷ் “ அம்மா நீ பெண் பார்த்த்து போதும் ! எனக்கு கல்யாணம் பண்ணிக்கணுங்கிற இண்ட்ரஸ்டே போயிருச்சு !” ” அய்யோ ! இந்த பொண்ணுங்கள் எவ்வளோ டிமாண்ட் பண்றாங்க !   சொந்த வீடு இருக்கணும் ஒண்ணரை லட்சம் சம்பளம் வேண்டும் கூட பிறந்தவங்க குறிப்பா நாத்தனார் இருக்கக் கூடாது . கல்யாணமான தனிக்குடித்தனம் போகணும் சொந்தமா கார் இருக்கணும் . ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் குழந்தை பெத்துக...