தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

வெள்ளை அடிக்கையில்
அழுக்காகிப் போனது!
பக்கத்துவீடு!

கொளுத்தும் வெயில்
குடையாய் வந்தன
மரங்கள்!

பிம்பங்கள் பெரிதாகையில்
தொலைந்து போகின்றது!
நிஜம்!

தொட்டியில் அடைபட்டது
வாஸ்து மீனின்
சுதந்திரம்!

கண்டித்தாலும் விடுவதில்லை
குழந்தைக்கு
மண்ணாசை!
மேடு பள்ளங்கள்!
தடுத்து நிறுத்துகிறது
வாழ்க்கையின் ஓட்டத்தை!

விரல் அசைவில்
பிறக்கின்றன
எழுத்துக்கள்!

நினைவுகள் பூக்கையில்
வாசம் வீசியது
நட்பு.

இருள் கவ்விய சாலைகள்!
மிளிர்ந்தன
வாகன வெளிச்சம்!

அமாவாசை இரவு
நெருங்கி வந்தன
நட்சத்திரங்கள்!

விழித்து எழுந்ததும்
கலைந்து போனது
கனவு!

இலையுதிர்த்த மரங்கள்!
காணாமல் போனது
நிழல்!

கொட்டிக்கிடந்தது
பிச்சைக்காரர்களிடம்
சில்லறை!

தூரப் போகிறார் கடவுள்!
நீண்டு கொண்டே போகிறது!
தர்ம தரிசனம்!

விலை நிர்ணயம் ஆனதும்
உரிமை பறி போகிறது!
தேர்தல்!


நிறுத்தம் வந்ததும்
பிரிந்து போகிறது சிநேகம்!
பேருந்துப் பயணம்!

பின் குறிப்பு} நீ,,,,ண்ட இடைவெளிக்குப் பிறகு ஹைக்கூ எழுதியுள்ளேன்! பழைய கூர்மை இருக்காது…  மீண்டும் தொடர ஆசை! பார்ப்போம்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. ரசித்தேன்...

    தொடருங்கள்...

    ReplyDelete
  2. அனைத்தும் சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. அழுத்தம் மிகுந்த வார்த்தைகள், ஆழம் மிகுந்த சிந்தனை. Please write a lot.

    ReplyDelete
  4. அருமையான பதிவு
    சிறப்பு, பாராட்டுகள்.

    ReplyDelete
  5. தர்மதரிசனமும், வாஸ்துமீனின் சுதந்திரமும், தேர்தல் கவிதையும்...

    அட..

    எல்லாமே நல்லா இருக்கு.​

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!