தினமணி இணையதளக்கவிதை!
இன்றைய தினமணி கவிதை மணி இணையதளத்தில் வெளியான எனது கவிதை நதிக்கரையின் நினைவலைகள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 16th April 2018 03:01 PM | அ+ அ அ- | ஓடிக்கொண்டிருந்த ஓர் நதி இன்று முடங்கிக் கிடக்கிறது! நீரோடிய இடங்களில் எல்லாம் சீமைக் கருவேல மரங்கள் வேர்பிடித்திருக்கின்றன! உயிரான நீர் ஓடவில்லை! உடலான மணல் காணவில்லை! நதி பெருக்கெடுத்து நுரைததும்ப ஓடிய நாட்கள் நினைவில் பெருக்கெடுக்கின்றன! ஆடிப்பெருக்கில் மக்கள் கூடி நின்றபோது ஆர்பரித்து ஓடிய நதியலைகள் ஓய்ந்து போகவில்லை! ஆலமரத்துக்கரையோரம் படித்துறையில் பசங்களோடு உள் நீச்சல் ஆடிய நதி! காலமான பெருசுகளை கரைசேர்த்து முழுகி கரையேற்றிய நதி! முப்போகம் விளைச்சளுக்கு முழுசாக பாசனம் தந்த பாசமிகு நதி! ஊர்த்தாகம் தீர்த்து வைக்க ஊருணியாக வலம் வந்த நதி! ஐப்பசி கார்த்திகை அடைமழையில் ஆர்பரித்து பொங்கி வெள்ளம் வடித்த நதி! சித்திரை வெயிலில் திருவிழா மைதானமாகி தித்தித்த நதி! அத்தனையும் இழந்து அமங்கலியாய் ...