தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி இணைய தளத்தில் கவிதை மணி பகுதியில் எனது கவிதைகள் பிரசுரம் ஆவதை அறிவீர்கள். கடந்த சில வாரங்களாக பிரசுரம் கண்ட கவிதைகள் கீழே தந்துள்ளேன்.


மேகம் போடும் தாளம்!

கறுத்த வானத்தில் பெறுத்த மேகங்கள்
கூடும் காலம்!
சிறுத்த செடிகள் எல்லாம் அமுத மழை
உறிஞ்ச மகிழும் நேரம்!
வறுத்த வெயில் மறைந்து
சிலிர்த்த காற்று எழும் காலம்!
வெடித்த நிலங்கள் எல்லாம்
நீரைக் குடித்து மகிழ  தவிக்கும் நேரம்!
காய்ந்த குளங்கள் எல்லாம்
மேய்ந்த விலங்குகள் மேடேறும் நேரம்!
ஓய்ந்த கோடைக் காலம் சென்று
ஓடைகள் எல்லாம் நீரோடும் நேரம்!
வாடிய பயிர்கள் எல்லாம்
உயிர் பிடிக்க வான் மழை பெய்யும் நேரம்!
வானில் ஓடும் மேகமெல்லாம்
தூணில் பறித்த சிற்பமென நகரும் காலம்!
வறண்ட பாலைதனை சோலையாக்கிட
வானமழை பொழிந்திட மேகக் கூட்டமெல்லாம்
இசைத்திடும் தாளம்!
மேகம் போடும் தாளம்! இது மேதினியை
வாழ வைக்கும் நாதம்!
மேடு பள்ளம் எங்கும் மக்கள்
விரும்பிடும் தாளம்!
முகிலம் போடும் தாளம்! அது
அகிலம் விரும்பும் நாதம்!


நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

கவிக்கோவுக்கு கவிதாஞ்சலி: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 12th June 2017 04:27 PM  |   + -   |  
கவிதைக்கு அவர் அரசன்!
கவிஞர்களுக்கு அவர் தோழன்!
நிழல் தேடும் பறவைகளுக்கோர் ஆல் போல
இளம் கவிஞர்களுக்கோர் அவர் பல்கலைக்கழகம்!
ஹைக்கூ அவர் கைப்பிள்ளை!
பல ஹைக்கூ கவிஞர்கள் இவர் செல்ல பிள்ளை!
விருட்சமாய் மட்டும் வளராது
விழுதுகள் பல விட்டுச்சென்றார்!
விருதுகள் அவரைத் தேடிய போதும்
விலகியே நின்று பலருக்கு வழிகாட்டினார்!
துளிப்பா பல படைத்து தமிழிலக்கியத்தை
களிப்பா ஆக்கியவர்!
தமிழ் ஹைக்கூ தளிர் நடை பயின்றிட
தனி பாதை வகுத்து தந்திட்டவர்!
கவிக்கோ பட்டம் பெற்றிட்டவர்
கவிக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்!
எளிமை வாழ்க்கை வாழ்ந்து
என்றும் மனதில் இடம்பிடித்தவர்!
தமிழிலக்கிய உலகில் தனி இடம் பதித்தவர்!
மண்ணுலகை ஆண்ட கவி
விண்ணுலகை ஆளப் புறப்பட்டார்!
ஏழு உலகிலும் உன் பெயர் ஆளும்!
எண்ணிலா கவிதைகள் உன் பெயர் சொல்லும்!
என்றும் தமிழின் கவிக்கோ நீதானே!
சென்று வா! நன்று வாஹைக்கூ வா!


கல்லறைப்பூவின் கண்ணீர் துளிநத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 19th June 2017 03:50 PM  |   + -   |  
இவ்வுலக வாழ்க்கையைத் துறந்தவனுக்கு
இறுதி அஞ்சலியாய் என்னைத் தூவினார்கள்!
பூவுலகில் ஜனித்தும் புண்ணியம்
செய்யவில்லை போலும் நான்!
செடியிலே உலர்ந்து மடிந்திருந்தாலும் மகிழ்ந்திருப்பேன்!
மனிதனின் சவத்திலே மலர்ந்திருக்க விரும்பேன்!
அகம்பாவம்”  ஆணவம், தற்பெருமை என்று ஒரு கூட்டம்!
வெறும் பாவமாய்  விரோதியையும் நண்பராக கருதும் ஒரு கூட்டம்!
வாழ்க்கையெல்லாம் நாடகமாடும் ஒரு கூட்டம்! அது மனித கூட்டம்!
ஓடி ஓடி சேர்த்து ஒன்றும் கொண்டு செல்லாதவனின் உடல் மீது நான்!
கோடி கோடியாய் கொடுத்து படுத்துக்கிடப்பவன் மீதும் நான்!
 வசைபாட வாழ்ந்தவன் மீதும் நான்!
இசை பாட  வாழ்ந்தவன் மீதும் நான்!
உதிர்ந்தவன் மீது உதிர்ந்து கிடக்கும் பூக்களாய் நான்!
 
 
தெய்வச்சிலைகளின் கழுத்திலே மாலையாய் அலங்கரித்தேன்!
தெய்வமாய் போற்றிய தலைவர்களின் கழுத்துக்கு அணியானேன்!
புகழை விரும்பியவனின் சிரங்களில் மலர்ந்திருந்தேன்!
மணமக்கள் சூட மகிழ்ந்திருந்தேன்!
ஓணமென்று ஒயிலாய் கோலங்களில் பூத்திருந்தேன்!
கல்லறையில் இன்று நான் பூத்திருக்க
காரணம் என்ன?
நல்லவனோ கெட்டவனோ இறந்தவுடன் சவமாகிறான்!
 சிவப்பழமானாலும் அவன் சவமானது போல
அழகழாகாய் பூத்தாலும்சாவுப்பூஎன்று
பழிச்சொல்லுக்கு ஆளானேன்!
இறந்தவனை இடுகாட்டுக்கு கொண்டு செல்கையில்
எல்லோர் கால்களிலும் மிதிபட்டு புண்ணானேன்!
ஒருநாளே என் வாழ்க்கை! அதை
ஒரு வாழ்க்கை இழந்தோனுக்கு அர்ப்பணித்தேன்!
மனிதரில் தெய்வமாக அமைந்தோர்க்கு
தினம் தோறும் என்னை அர்ப்பணிப்பேன்!
கண்ணீரை சிந்திய உற்றாரின் பாசம்
கைவிட்டு சென்றாரின் கல்லறை வாசம்
அத்தனைக்கும் சான்றாய் கல்லறைகளில் காய்ந்திருப்பேன்!
ஒய்ந்திட்ட மாந்தருக்கெல்லாம் கண்ணீர் சிந்துவோரே!
காய்ந்திட்ட என் இதழ்களை கண்டும் சிறிது சிந்துங்களேன் கண்ணீரை!


பின் குறிப்பு: சொல்ல முடியாத ஒரு வேதனையினால் தொடர்ந்து எழுத முடிவதில்லை!  ரிலாக்ஸாக சில படைப்புக்கள் பத்திரிக்கை களுக்கு மட்டும் எழுதுகிறேன்! விரைவில் மீண்டு வருகிறேன்! அதுவரை பொறுத்திருங்கள் நண்பர்களே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வாருங்கள் விரைவில்...

    வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. அனைத்திற்கும் வாழ்த்துக்கள் சுரேஷ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2