தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!
தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்! தினமணி இணைய தளத்தில் கவிதை மணி என்றொரு பக்கம் உண்டு. வாரா வாரம் திங்கள் கிழமைகளில் ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொல்கிறார்கள். இந்த திங்கள் கொடுக்கும் தலைப்புக்கான கவிதைகள் அடுத்த திங்களில் வெளிவரும். சனிக்கிழமைக்குள் படைப்புக்களை அனுப்பி விட வேண்டும். தமிழகத்தின் பிரபல கவிஞர்களும் இதில் எழுதி வருகிறார்கள். புதியவர்களும் எழுதுகின்றார்கள். நானும் எழுதி வருகிறேன். சென்றவாரமும் இந்த வாரமும் இதில் வெளியான எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு. குழந்தையின் குரல்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு. By கவிதைமணி | Published on : 21st May 2017 10:56 AM | அ+ அ அ- | குயிலோசையின் இனிமையை கசக்கச் செய்திடும் குழலோசையின் இசையை மறக்கச் செய்திடும் தேனின் தித்திப்பை மறக்கடிக்கும்! தீம்பழத்தின் சுவைதனை கசக்கச் செய்திடும்! தெவிட்டாத தமிழ் மொழியை பின் தள்ளிடும்! குடும்பத்தில் குதூகலத்தை குறைவில்லாது அளித்திடும்! பொங்கி வரும் கோபத்தை பொசுக்கிவிடும்!...