இந்த வார விகடனில் எனது ஜோக்!
இந்த வார விகடனில்
எனது ஜோக்!
இரண்டு மாதங்களுக்கு
மேல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததோடு இணைய இணைப்பும் சரிவர இல்லை. போன் மூலம்
இணையம் இணைப்பது சரிவர இல்லை! அதனால் வலைப்பூ
பக்கம் வர முடியவில்லை! ஓய்வெடுக்கும் சமயத்தில் பத்திரிக்கைகளுக்கு படைப்புக்கள் அனுப்புவது
உண்டு.
தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தில் இருப்பதால்
நண்பர்களின் படைப்புக்கள் வெளிவருகையில் வாழ்த்துவதும் அவர்கள் நம்மை எழுதத் தூண்டுவதும்
சகஜமாகிவிட்டது. மிக அருமையான வாட்சப் குருப் அது. நண்பர் புது வண்டி ரவீந்திரன் அவர்கள்
அறிமுகம் செய்து இணைத்து விட்டார்.
அந்த குருப்பில் இணைந்தபிறகுதான் நிறைய எழுத வேண்டும்
என்ற ஆவலே தோன்றியது. நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனைகள் திருத்தங்கள் கூறி சக எழுத்தாளர்களை
ஊக்குவிக்கிறார்கள் என்றால் அது பெருமையான விஷயம். பொறாமைப்படாமல் அவனுடையது வருகிறது
எனது வரவில்லையே என்று யாரும் வேதனைப்படுவது கிடையாது. நிறைய பேரை ஊக்குவித்து மீண்டும்
எழுதத் தூண்டியுள்ள அருமையான குருப் தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமம்.
இந்த குழுவில் நண்பர் கிருஷ்ண குமார் ஒரு முறை அலை
பேசி உரையாடலில் விகடனுக்கு எழுதுவது குறித்து சில ஆலோசனைகள் சொன்னார். அதை பின்பற்றினேன்.
போன வாரம் ஒரு ஜோக்கும் இந்த வாரம் ஒரு ஜோக்கும் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இதில் ஓர்
வருத்தம் என்னவென்றால் இந்த வார ஜோக் சென்னை பதிப்பில் வெளிவரவில்லை. மற்ற மாவட்டங்களில்
வெளிவந்துள்ளது.
இரண்டும் உங்களின்
பார்வைக்கு கீழே தந்துள்ளேன்.
தொடர்ந்து இரண்டுவாரங்கள்
விகடனில் ஜோக் வருவது இதுவே எனக்கு முதல் முறை. விகடன் குழுமத்தினருக்கும் தமிழக எழுத்தாளர்
வாட்சப் குழுமத்தினருக்கும். நண்பர் கிருஷ்ண குமார், ஏந்தல் இளங்கோ, புதுவண்டி ரவீந்திரன்
சார்களுக்கும் மிகவும் நன்றி.
தொடர்ந்து எனது
பதிவுகளை வாசித்து வரும் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
வாழ்த்துகள் நண்பரே தொடரட்டும்...
ReplyDeleteசின்ன மீட்பு நடவடிக்கை :) ரசித்தேன் ..வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரா...
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteவாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
ReplyDeleteதொடர்ந்து தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் !
ReplyDeleteஎன்னையும் அந்த குருப்பில் இணைத்து விடுங்க ஜி :)
செல் எண் 8903694875
தாங்கள் எனது குழுவில் இணையுமாறு அழைக்கின்றேன்.
ReplyDeletehttps://plus.google.com/u/0/communities/110989462720435185590