தினமணி கவிதை மணியில் என் கவிதை

இன்றைய தினமணி கவிதைமணியில்
என்னுடைய கவிதைகள் இரண்டு
பிரசுரம் ஆகியுள்ளது அதில் ஒன்று என் மகள் பெயரில் எழுதியது  உடல் நலக்குறைவால் இத்தனை நாள் தளிர் மலரவில்லை இனி தொடர்ந்து மலரும். விசாரித்த நண்பர்களுக்கு நன்றி
பச்சை நிலம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 03rd April 2017 03:46 PM  |   அ+அ அ-   |

கண்ணுக்கு குளுமை தரும் பச்சை நிலம்!
காண்போரை இச்சை கொள்ளச்செய்யும் பச்சை நிலம்!
வயலெல்லாம் நாற்றுக்களாய் வளைந்தாடி
வளர்ந்து நின்று உழவனை ஊக்குவிக்கும் பச்சை நிலம்!

தீயாய் சுட்டெரிக்கும் கத்திரி தணலினிலே
தென்றலாய் உடல்வருடும் ஓங்கி வளரும் பச்சை நிலம்!
வற்றாத நதிகள் எப்போதும் பாய்ந்தோட
வளர்ந்து அசைந்தாலும் புவியெங்கும் பச்சை நிலம்!

குன்றாத மழை தப்பாமல் பொழிந்திட்டால்
நன்றாக செழித்து வளர்ந்திடும் தரணியெங்கும் பச்சைநிலம்!
பசுமை போர்த்தி அழகு சேர்க்கும் சாலையோர மரங்கள்
குன்றின் மீது போர்வையாக வளர்ந்து அழகூட்டும் மரங்கள்!

வீடு தோறும் வீதி தோறும் மரங்கள் வளர்த்திட
கண்கள் காணும் காட்சியெல்லாம் பச்சை நிலம்!
இயற்கை வண்ணம் பூசி செயற்கை சிறிதும் இன்றி
பிறக்கும் குழந்தை பச்சை நிலம்!

இச்சை கொண்டு எல்லோரும்
பச்சை பேண முனைந்திடின்
பாரெங்கும்  காணக்கிடைக்கும்
பசுமை கொஞ்சும் பச்சைநிலம்!

Comments

 1. அருமை நண்பரே வாழ்த்துகள்
  உடல் நலம் கவனம் கொள்க.

  ReplyDelete
 2. கவிதை வெளியானது குறித்து மகிழ்ச்சி. உடல் நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
 3. அருமை.

  உடல் நலம் முக்கியம். கவனமாக இருங்கள்.

  ReplyDelete
 4. பாராட்டுகளும் வாழ்த்துகளும் 'தளிர்' சுரேஷ்.

  ReplyDelete
 5. இச்சை கொண்டு எல்லோரும்
  பச்சை பேண முனைந்திடின்
  பாரெங்கும் காணக்கிடைக்கும்
  பசுமை கொஞ்சும் பச்சைநிலம்!//
  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.
  உடல் ந்லம் பெற்றது அறிந்து மகிழ்ச்சி.
  :

  ReplyDelete
 6. கவிதை அருமை நண்பரே! உடல்நலத்தைப்பேணிக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
 7. இச்சை கொண்டு எல்லோரும்
  பச்சை பேண முனைந்திடின்
  பாரெங்கும் காணக்கிடைக்கும்
  பசுமை கொஞ்சும் பச்சைநிலம்!
  என்றே உணருவோம்

  ReplyDelete
 8. பசுமை பரவட்டும்
  கவிதைகள் தொடரட்டும்
  உடல் நலம் பெறட்டும்
  வாழ்த்துகள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2