இந்த வார விகடனில் எனது ஜோக்!
இந்த வார விகடனில் எனது ஜோக்! இரண்டு மாதங்களுக்கு மேல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததோடு இணைய இணைப்பும் சரிவர இல்லை. போன் மூலம் இணையம் இணைப்பது சரிவர இல்லை! அதனால் வலைப்பூ பக்கம் வர முடியவில்லை! ஓய்வெடுக்கும் சமயத்தில் பத்திரிக்கைகளுக்கு படைப்புக்கள் அனுப்புவது உண்டு. தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தில் இருப்பதால் நண்பர்களின் படைப்புக்கள் வெளிவருகையில் வாழ்த்துவதும் அவர்கள் நம்மை எழுதத் தூண்டுவதும் சகஜமாகிவிட்டது. மிக அருமையான வாட்சப் குருப் அது. நண்பர் புது வண்டி ரவீந்திரன் அவர்கள் அறிமுகம் செய்து இணைத்து விட்டார். அந்த குருப்பில் இணைந்தபிறகுதான் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலே தோன்றியது. நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனைகள் திருத்தங்கள் கூறி சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறார்கள் என்றால் அது பெருமையான விஷயம். பொறாமைப்படாமல் அவனுடையது வருகிறது எனது வரவில்லையே என்று யாரும் வேதனைப்படுவது கிடையாது. நிறைய பேரை ஊக்குவித்து மீண்டும் எழுதத் தூண்டியுள்ள அருமையான குருப் தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமம். இந்த குழுவில் நண்பர் கிருஷ்ண குமார் ஒரு முறை அலை பேசி ...