சிரிக்காமல் விடமாட்டோம்


சிரிக்காமல் விடமாட்டோம்!
 
@நமீதா கட்சி ஆரம்பித்தால் என்ன பேர் வைப்பார்?

மச்சான்கள் முன்னேற்ற கழகம்.

@ஆனாலும் நம்ம தலைவருக்கு இந்தளவுக்கு நமீதா பாசம் இருக்ககூடாது!

ஏன் என்னாச்சு!

உங்க ஆட்சியில டி.வி ஷோவுக்குதான் நமீதாவ ஜட்ஜாஆக்கினீங்க எங்க ஆட்சி வந்தா ஹைகோர்ட் ஜட்ஜாவே ஆக்கிடுவொமுன்னு பேசறாரு!

@பரீட்சையில பாஸாக முப்பது வழிகள்னு புத்தகம் படிச்சியே என்ன போட்டிருந்தது?

இந்தபுத்தகத்த மூடிட்டு பாடபுத்தகத்த படிச்சா நீ பாஸுன்னு போட்டிருந்தது.

@நீதிபதி: நீ கோடி வீட்டுல திருடினியா?
திருடன் : கோடிகோடியா கொள்ளையடிச்சவன விட்டுட்டாங்க கோடிவீட்டுல கோடி திருடன என்ன பிடிச்சுடுங்க எசமான்.

@தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு?

தேர்தல் பிரச்சாரத்துக்கு போன இடத்துல ஒரு பாட்டி “மகராசனா” இருன்னு வாழ்த்திடுச்சாம்.

@சட்டைய கழட்டுறமாதிரி கூட்டணிய கழட்டி விடற தலைவருக்கு என்னாச்சு சத்ததையே காணோம்?

சாயம் வெளுத்துப்போச்சுன்றதால யாரும் அவர “சட்டை” பண்ணலியாம்.

@நயந்தாராவுக்கு பிடிக்காத படம் எது?

“சிலம்பாட்டம்” தான்


@அம்பயர் அவுட்கொடுத்தும் அந்த பேட்ஸ்மேன் ஏன் வெளியே போகல?

அவர் அவுட்ஸ்டேண்டிங் பேட்ஸ்மேனாம்.

@அந்த பவுலர் ஏன் அம்ப்பயர சுத்திசுத்திவந்து பால் போடறார்.

அவரு பெரிய ஆல் ரவுண்டராம்.

டிஸ்கி1 அட்றாசக்க சி.எஸ்.கே வ பாத்துட்டு நானும் ஏதோ ஜோக் எழுதிட்டேன்  கடுப்பா இருந்தா மண்ணிக்கவும்.
டிஸ்கி 2 ஜோக் மொக்கயா இருந்தாலும் நமிதா படம் போட்டதுக்காவது ஓட்டு போடுங்கப்பா!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2