அந்தாதி ஹைக்கூ!
அந்தாதி ஹைக்கூ! தூண்டி விட்டதும் சுடர் விட்டது அகல்விளக்கு! விளக்கு ஏற்றியதும் அடியில் ஒளிந்துகொண்டது இருட்டு! இருட்டுக் கடையில் வாங்கினாலும் எடையில் குறையவில்லை! இனிப்பு! இனிப்புக் கடை! கூட்டம் மொய்த்தும் மகிழவில்லை! ஈக்கள். ஈக்கள் சூழ்ந்தன இறந்து கிடந்தான் அனாதை! அனாதை இல்லம் கை கோர்த்தன புதிய உறவுகள் உறவுகள் கைவிட்டதும் பற்றிச் சென்றது காற்று சருகு! சருகுக் குவியல் கலைத்துப் பார்த்தது காற்று! காற்றுக்கு வேலி போட்டதும் உடைத்துக்கொண்டு புறப்பட்டது புயல்! புயலாய் பறக்கும் வாகனங்கள் மெதுவாக சாலையைக் கடக்கிறது சிற்றெரும்பு. சிற்றெரும்பு மிதந்த தேநீர் ஆறிப்போனது துக்கவீடு! துக்கவீட்டில் நேரம் கடந்துகொண்டிருப்பதை உணர்த்துகிறது ஊதுபத்தியின் சாம்பல்