அன்ன தோஷம் போக்கும் ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம்
அன்ன தோஷம் போக்கும் ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம் உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உயிராய் செயல்படுவது அன்னம். அத்தகைய அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்விப்பது அன்னாபிஷேகம் என்று சிறப்பாக சொல்லப்படுகின்றது. எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன் ? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது. சாம வேதத்திலே ஒரு இடத்தில் “ அஹமன்னம் , அஹமன்னம் , அஹமன்னதோ ” என்று கூறப்பட்டுள்ளது , அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம , விஷ்ணு , சிவ சொரூபம். அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகவும் விஷேசமானது ஆகும். ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும். சிவன் பிம்பரூபி , அவரது மெய்யன்ப...