குழந்தைகள் தினம்! கள்ளமில்லா அன்பை வெள்ளமாய் தரும் ஜீவன்கள்! கோபம் கூட மறைந்து போகிறது மழலையின் சிரிப்பில்! குழந்தைகள் எழுதும் எழுத்துக்கள் இல்லா சுவர்கள் தூய்மையாக இருந்தாலும் எதையோ இழந்து நிற்கின்றன! குழந்தை பூவாய் மலர்கையில் வாசமாகிறது வீடு குழ்ந்தைகள் தாத்தாவின் முதுகில் குதிரையேற்றம் நடத்துகையில் குழந்தையாகிறார் தாத்தா! கடவுள் கொடுத்த கடவுள் குழந்தை! குழந்தையின் மெத்தென்ற ஸ்பரிசம் பட்டதும் சத்திழக்கின்றன சண்டித்தனம் செய்த சங்கடங்கள்! எதிரியைக் கூட எளிதில் வீழ்த்துகிறது குழந்தையின் சிரிப்பு! அப்பாவோடு ஒட்டிக்கொள்கின்றன பெண்குழந்தைகள்! அம்மாவோடு நெருக்கம் காட்டுகின்றன ஆண்குழந்தைகள்! எதிர்பாலின ஈர்ப்பு! என்றாலும் எல்லாக் குழந்தைகளையும் ஈர்க்கின்றது தாத்தா உறவு! பிள்ளைகள் தவழ்கையில் ஈரமாகிறது பூமி! கண்ணாடிகளாய் குழந்தைகள்! நம்மை பிரதிபலிக்கிறது! நல்லதை ஊட்டுவோம் நல்லதை பெறுவோம்! உடைத்தால் சிதறும் பிடிக்க முடியாது! பிடிவாதங்கள் உடைபட்டுப்போகின்றன க
அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்! அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந்த மரத்தின் விதைகள், வேர், பட்டைகள் முதலியன பயன்படுகிறது. இதில் ஒருவகை மரம் வேர் அழிஞ்சில் என்பதாகும். ஏறிழிஞ்சி: ஏறு+ இழிஞ்சி என்பதே இவ்வாறு ஏறிழிஞ்சி என சேர்ந்து புணர்ந்தது. இழிஞ்ச மரத்து விதைகள் கீழே விழுந்து மீண்டும் மரத்தில் ஏறி ஒட்டிக் கொள்ளும் வித்தியாசமான மரமே ஏறிழிஞ்சி. இது தெய்வீக மரமாகும். அழிஞ்சி, அழிஞ்சில், வேர் அழிஞ்சில் என்றும் இந்த மரம் வழங்கப்படுகிறது. இந்த வேர் அழிஞ்சில் மரமானது பங்குனி, சித்திரை,மாதங்களில் பூத்து குலுங்குகிறது. பூக்கள் நறுமணம் வீசும். நல்ல அழகுடையது. ஆனி மாதத்தில் இதன் காய்கள் பழமாகின்றன. பழுத்த பழங்கள் கீழே விழுகின்றன. விழுந்த விதைகள் சில தேர்ந்தவிதைகள் நகர்ந்து ஏறி அடிமரத்திலும் கிளைகளிலும் ஒட்டிக் கொள்கின்றன. இவ்வாறு மரத்தில் ஒட்டிய விதைக் கூடுகளை பிரித்து எடுக்கவே முடியாது. நூற்றுக்கணக்கான விதைக் கூடுகளை எக்காலத்திலும் பார்க்க முடியும். நம் உடலில் ஏற்படும் சிறு கொப்புளங்கள் போல இந்த வ
வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2 வணக்கம் அன்பர்களே! சென்ற பகுதியில் வார மாத இதழ்களில் சிறுகதை எழுதுவது குறித்து பார்த்தோம். சிறுகதை இலக்கியத்திற்கு இப்போது பத்திரிகைகளில் பெரிய வரவேற்பு இல்லை. நாவல் என்பது கூட 80 முதல் 100 பக்கங்களுக்குள் குறைந்து போய்விட்டது. அப்படிப்பட்ட சூழலில் சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாகத்தான் இருக்கும். சரி அப்புறம் எப்படி பத்திரிகையில் உங்கள் பெயர் வருவது? நீங்கள் எப்படி சந்தோஷம் அடைவது? அதற்கு நீங்கள் வாசக எழுத்தாளராக துணுக்கு எழுத்தாளராக மாற வேண்டும். இன்று வரும் பிரபல வார மாத இதழ்களில் நகைச்சுவை துணுக்குத்தவிர வீட்டுக் குறிப்புகள், வாசகர் கடிதங்கள், ஆன்மீகக் குறிப்புகள்,கேள்வி பதில், இணையத் துணுக்குகள் என்று ஏராளமான வாய்ப்புகள் வாசக எழுத்தாளர்களுக்குக் கொட்டிக் கிடக்கின்றன. பத்திரிகையில் எழுத விரும்பும் ஆரம்ப கால எழுத்தாளர்கள் வாசகர் கடிதம், கேள்விபதில் துணுக்கு, ஜோக்ஸ் என்று படிப்படியாக தன்னை வளர்த்துக் கொள்வது வழக்கம். சில வாசகர்கள் வாசகர் கடிதம், கேள்விபதிலோடு தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொள்வதும் உண்டு
Comments
Post a Comment