ஒரு வரிக் கதைகள்!
பூமி ! அதோ தெரியுது பார் பூமி ! அங்கேதான் நம்ம முன்னோர்கள் வசித்துவந்தார்கள் என்று குழந்தைக்கு கதை சொல்லி நிலாவில் சோறுட்டிக் கொண்டிருந்தாள் கி . பி .2200 ல் தாய் . லீவ் எப்ப ? ” கொரானா முதல் அலை , ரெண்டாவது அலைக்கு லீவ் விட்டாங்களே ! இப்போ ஓமிக்ரான் வந்திருக்கே எப்பப்பா லீவ் விடுவாங்க ?” என்று அப்பாவிடம் ஏக்கமாய் கேட்டான் மூன்றாவது படிக்கும் முகில் . தண்டணை ! ” இன்னொருமுறை இந்த தப்பு பண்ணிணேன்னா மழைக்காலத்திலே சென்னைக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுவேன் ஜாக்கிரதை !” என்றார் ஆபீஸ் மேனேஜர் . இழப்பு ! வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வீடிழந்தன குளத்து மீன்கள் . மறந்திடாதீங்க ! ” மாஸ்க்கை எங்காவது மறந்து விட்டுடப் போறீங்க ! மறக்காம போட்டுட்டு வாங்க !” என்று வெளியே செல்கையில் அறிவுறுத்தி அனுப்பினாள் மனைவி . 2121 சாப்பிட்டு முடித்ததும் ஒரு மாத்திரையை விழுங்கியவன் . தொண்டைக்குள் இறங்கியது விலைமதிப்பில்லா குடிநீர் . எப்ப வருவீங்க? அப...