Posts

Showing posts from September, 2021

ரன் எக்ஸ்பிரஸ் மிதாலி ராஜ்- பகுதி 5

Image
  ரன் எக்ஸ்பிரஸ் மிதாலி ராஜ் - பகுதி 5   இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடையாளமாகிவிட்டார் 38 வயதான மிதாலி என்றால் மாற்றுக் கருத்தில்லை . எப்படி ஆண்களுக்கு கபில்தேவ்வும் , கவாஸ்கரும் , சச்சினும் , தோனியும் , கோலியும் வளரும் கிரிக்கெட் தலைமுறையினருக்கு ஒரு இன்ஸ்பிரேஷனோ அப்படிதான் பெண்களுக்கு மிதாலி ராஜ் ஒரு ஆதர்சன வீராங்கனையாக வளம் வருகிறார் , எப்போதும் இருப்பார் . இந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஷ்வினையும் மிதாலி ராஜையும் இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்துள்ளது . இந்த விருதைப் பெற்றால் இவ்விருது பெறும் முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனையாக இருப்பார் .    கிரிக்கெட்டை மணந்துகொண்ட மிதாலி திருமணம் செய்துகொள்ளவில்லை ! இந்திய பெண்கள் பலருக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் மிளிரவும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் சாதனை படைக்கவும் ஒரு தூண்டுகோலாக   மிதாலி விளங்குகிறார் என்றால் மிகையில்லை . சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார் மிதாலிராஜ் . ...