தினமலர்- வாரமலர்- டிவிஆர் நினைவுச்சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற என் கதை

 தினமலர் டி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப் போட்டி திருச்சி பதிப்பில் இம்முறை ஆறுதல் பரிசு கிடைத்தது. அக்கதை 6-12-2020 தினமலர் வாரமலர் திருச்சி பதிப்பில் பிரசுரம் ஆகியுள்ளது. சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெறுவது இதுவே முதல் முறை. இதையடுத்து குமுதம்- கொன்றை சிறுகதைப்போட்டியிலும் ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது. இன்னும் சில நரகாசூரன்கள் கதை நான் எழுதி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது சுவாரஸ்யமான விஷயம். அந்தக் கதையை கொஞ்சம் சீர்படுத்தி சென்ற ஆண்டு சென்னை தினமலருக்கு அனுப்பி பரிசு பெறவில்லை! இம்முறை திருச்சி தினமலருக்கு அனுப்பியதில் பரிசு கிடைத்துள்ளது. நல்ல படைப்புகளுக்கு காலம் தாழ்ந்தாலும் மதிப்பு உண்டு என்பதை உணர வைத்தது இந்த நிகழ்வு.

நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தினமலர் திருச்சி பதிப்பில் வெளியான இக்கதையை புகைப்பட பதிவாக்கி அனுப்பிய நண்பர் செந்தில் மோகனுக்கும். கேட்காமலேயே அனுப்பிய முகநூல் வலைப்பூ நண்பர் கும்பகோணம் ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கும் எனது பேரன்பின் நன்றிகள்.
இது போன்ற பரிசுகள் என்னை தொடர்ந்து சிறுகதை தளத்தில் இயங்க ஊக்கப்படுத்தியுள்ளது. பல முனைகளில் சிதறிய என் சிந்தனைகளை ஒரு பாதையில் பயணிக்க எனக்கு பரிசளித்து ஊக்கப்படுத்திய திருச்சி தினமலர்- வாரமலர் நிர்வாகத்தினருக்கும் தொடர்ந்து என் படைப்புகளை வாசித்து ஊக்கப்படுத்தி வரும் நண்பர்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
போட்டோ பதிவில் தெளிவாக வாசிக்க இயலாதோருக்காக தனி பதிவில் என் கதையை பதிவிடுகின்றேன்.
நண்பர்கள் கதையை முழுமையாக வாசித்து கருத்துகளையும் விமர்சனங்களையும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.



Comments

  1. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2