Posts

Showing posts from December, 2020

தினமலர் வாரமலர்திருச்சி பதிப்பில் பரிசுபெற்ற கதை( வாசிப்புக்கு வசதியாக)இன்னும் சில நரகாசூரன்கள்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

இன்னும் சில நரகாசூரன்கள்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு ”அம்மோவ் தீவாளிக்கு எனக்கொரு டவுசரு எடுத்துத் தர்றியாம்மா?” தட்டில் வைத்த சோற்றைக் கூட திங்காமல் கண்களில் ஆவல் மின்ன கேட்கும் தனது 10வயது மகன் வேலனை வாஞ்சையோடு தலையில் தடவிக்கொடுத்த வள்ளி, “கண்டிப்பா டவுசரு, சட்டை எல்லாம் வாங்கிடலாம்டா! இப்ப சோறு துண்ணுவியாம்! என்று ஒரு கவளத்தை எடுத்து மகனின் வாயில் ஊட்டினாள். “போன தீபாளிக்கு கூட இப்படித்தான் சொன்னே? அப்புறம் பழைய துணியே போட்டுகிட்டு மிளகா டப்பாசு கொளுத்திட்டு கழிஞ்சு போச்சு! இந்தவாட்டியாவது நெறய கம்பி மத்தாப்பூ, புஸ்வானம், தரைச்சக்கரம், பெரிய வெடியெல்லாம் வெடிக்கணும்னு ஆசையா இருக்கும்மா!” ஏக்கம் நிறைந்த மகனின் விழிகளை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்த வள்ளி, ஆசுவாசப்படுத்திக்கொண்டு, எனக்கு மட்டும் ஆசையில்லையாடா வேலா! எங்க உங்க அப்பா வாங்கிற கூலி முச்சூடும் குடிச்சிட்டு வந்து நிக்கறாரு! என் சம்பளம் வாய்க்கும் வயித்துக்கும் சரியா போயிருது! அதான் …! ஆனா நீ கவலைப்படாதே! இந்த வருஷம் உனக்கு புது டவுசரு, சட்டை, நிறைய பட்டாசு அம்மா வாங்கித்தரேன். இப்ப நீ அடம்பிடிக்காம சோத்தை துண்ணு! என்று இன்னுமொர...

தினமலர்- வாரமலர்- டிவிஆர் நினைவுச்சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற என் கதை

Image
  தினமலர் டி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப் போட்டி திருச்சி பதிப்பில் இம்முறை ஆறுதல் பரிசு கிடைத்தது. அக்கதை 6-12-2020 தினமலர் வாரமலர் திருச்சி பதிப்பில் பிரசுரம் ஆகியுள்ளது. சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெறுவது இதுவே முதல் முறை. இதையடுத்து குமுதம்- கொன்றை சிறுகதைப்போட்டியிலும் ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது. இன்னும் சில நரகாசூரன்கள் கதை நான் எழுதி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது சுவாரஸ்யமான விஷயம். அந்தக் கதையை கொஞ்சம் சீர்படுத்தி சென்ற ஆண்டு சென்னை தினமலருக்கு அனுப்பி பரிசு பெறவில்லை! இம்முறை திருச்சி தினமலருக்கு அனுப்பியதில் பரிசு கிடைத்துள்ளது. நல்ல படைப்புகளுக்கு காலம் தாழ்ந்தாலும் மதிப்பு உண்டு என்பதை உணர வைத்தது இந்த நிகழ்வு. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தினமலர் திருச்சி பதிப்பில் வெளியான இக்கதையை புகைப்பட பதிவாக்கி அனுப்பிய நண்பர் செந்தில் மோகனுக்கும். கேட்காமலேயே அனுப்பிய முகநூல் வலைப்பூ நண்பர் கும்பகோணம் ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கும் எனது பேரன்பின் நன்றிகள். இது போன்ற பரிசுகள் என்னை தொடர்ந்து சிறுகதை தளத்தில் இயங்க ஊக்கப்படுத்தியுள்ளது. பல முனைகளில் சிதறிய என் சிந்தனைகளை ஒரு...

தேன்சிட்டு டிசம்பர் 2020 மின்னிதழ்