Posts
Showing posts from August, 2020
அடையாளம்! ஒருபக்க கதை!
- Get link
- X
- Other Apps
அடையாளம் ! ஒருபக்க கதை! கோடம்பாக்கம் அருகே ஒர் சுமாரான உணவகத்தில் சாலையை பார்த்தவாறு இருக்கும் மேஜையில் அமர்ந்து சர்வர் கொண்டுவந்து கொடுத்த மசால்தோசையை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவர் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தார். கல்லாவில் அமர்ந்தவரிடம் குரல் கொடுத்தார். அவரோ காசை வாங்கிப்போடுவதில் குறியாக இருந்தார் இவரை கவனிக்கவில்லை. அடுத்து அவர் டேபிள் கிளீன் செய்யும் ஒரு பையனிடம் குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என்று கேட்டார். அவனோ உள்ளே கை காட்டினான். அவர் மெதுவாக உள்ளே வந்து என் மேஜைமீதிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து கிளாசில் ஊற்றினார். சாப்பிட்டுக்கொண்டிருந்த நான் “சார்.. நீ.. நீங்க ஆக்டர் காமேஷ்தானே..! என்றேன். உஷ்! என்றுவாய்மீது விரல் வைத்து சைகைசெய்தவர், எதிரே அமர்ந்தார். பரவாயில்லையே என்னை இன்னும் ஞாபகம் வைச்சிருக்கீங்களே? உங்களை மறக்க முடியுமா? 80களில் கொடிகட்டிப்பறந்த காமெடி கிங்காச்சே நீங்க? அதெல்லாம் ஒரு காலம்! இப்ப ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழி கிடையாது! நீங்க மறுக்கலைன்னா நான் ஒரு தோசை ஆர்டர் செய்யட்டும...
ஆட்டம்! நூல் விமர்சனம்!
- Get link
- X
- Other Apps
நூல் விமர்சனம் ! ஆட்டம் ! வி . சகிதா முருகன் . பாவைமதி பதிப்பகம் . தமிழ்வாசகப்பெருமக்களுக்கு சகிதா முருகன் என்ற பெயர் மிகவும் பரிச்சயம் ஆனது . தமிழில் வெளியாகும் பிரபலமான வார மாத இதழ்களில் இவரது நகைச்சுவை துணுக்குகள் ஏராளமாக வந்து சிரித்து மகிழவைக்கும் . அப்படி நகைச்சுவைக்கு சொந்தக்காரரான சகிதா முருகனை ஒரு வித்தியாசமான சமூக நோக்கம் உள்ள எழுத்தாளராக இந்த ஆட்டம் சிறுகதை தொகுப்பு நம்மிடையே அறிமுகம் செய்துள்ளது . பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது சுவாரஸ்யமான முன்னுரையில் சொல்லியிருப்பது போல சகிதாமுருகன் வளர்ந்துவிட்ட எழுத்தாளர் என்பதை இந்த நூல் வாசிக்கும் போது உணர முடிகின்றது . மொத்தம் இருபது கதைகள் . ஒவ்வொன்றிலும் சமூக சிந்தனை விரிந்து கிடக்கிறது . சிறுகதைகள் என்றால் விரிந்து ஏழெட்டு பக்கம் இருக்கும் என்று எல்லோரும் பயந்துவிட வேண்டாம் . இக்கால வாசிப்புக்கு ஏற்ப மூன்று நான்கு பக்கங்களில் சிறுகதையை எழுதி சொல்லவந்ததை அழுத்தம் திருத்தமாய் பதிவிட்டு விடுகின்றார் எழுத்தாளர் ....