கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 101
ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடி நோயாளிக்கு நம்பிக்கை ஊட்டறா மாதிரி ஏதாவது ரெண்டு வார்த்தை பேசச்சோன்னேனே என்ன பேசினீங்க சிஸ்டர்? தினம் தினம் செத்து பிழைக்கறதோட ஒரே முறை செத்து போறது பெஸ்ட் இல்லையான்னு கேட்டேன் டாக்டர்! . கட்சி கட்டுப்பாட்டை மீறினா உடனே கட்சியை விட்டு நீக்கிடுவேன்னு நீங்க அறிக்கை விட்டது தப்பா போச்சு தலைவரே! ஏன் என்ன ஆச்சு? கட்சியிலே இப்ப தொண்டர்களுக்கு தட்டுப்பாடா ஆகிப்போச்சு படம் ஆரம்பிக்கிறப்போ ஹீரோயின் தன்னோட உயிரைக் காப்பாத்திக்க ஓட ஆரம்பிக்கிறா படம் முடிகிற வரைக்கும் அவ தன்னோட ஓட்டத்தை நிறுத்தவே இல்லை….! என்னய்யா இது? நல்ல உயிரோட்டமான கதை வேணும்னு கேட்டீங்களே அதுதான் இது…! சிக்னல் விழுந்தும் ஏன்யா நிற்காம வேகமா வந்துகிட்டிருக்கே? கூட வந்த பைக் காரன் “இருமி”கிட்டே இருந்தான்யா ஊரடங்கு போட்டிருக்குதே எதுக்குய்யா வெளியே வந்து சுத்திக்கிட்டிருக்கே? ஊட்டுக்கு அடங்காம் இருக்கேன்னு ...