சங்கடங்கள் விலக்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி.
முழுமுதல் கடவுளாம் விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்த விரத நாள் சங்கட ஹர சதுர்த்தி ஆகும். விக்கினங்களை போக்கும் விக்னேஸ்வரரான விநாயகப்பெருமாளை மஹா சங்கடஹர சதுர்த்தியன்று வழிபடுகையில் ஒரு ஆண்டுமுழுவதும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
மஹா சங்கடஹர சதுர்த்தியானது வருஷத்திற்கு இரண்டு முறை விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தி அன்றும் மாசிமாதத்தில் தேய்பிறை சதுர்த்தி அன்றும் அனுசரிக்கப்படுகிறது.
விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியது மஹா சங்கடஹர சதுர்த்தி. இந்த விரதம் இருந்தால் ஆனந்தத்தை அடைவதோடு சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.
மஹா சங்கடஹர சதுர்த்தியன்று நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.
ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்துப் பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சந்திரனை தரிசித்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். பிறகு இரவு உணவு எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் மாலையில் விநாயகப் பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். விநாயகர் துதி பாடல்கள், விநாயகர் அகவலை சொல்லி வழிபடலாம்.
சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் விநாயகரை வணங்கி மஞ்சள் கயிற்றை நாளை மாற்றினால் காலம் முழுவதும் சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
`மாசிக் கயிறு பாசியேறும் வரை நிலைக்கும்’, `மாசிக் கயிறு பாசி படியும்’ என்பது கிராமங்களில் கூறப்படும் பழமொழிகளாகும். அதாவது மாசி மாதம் விரதமிருந்து, மாற்றிக்கொள்ளும் மஞ்சள் கயிறானது, பாசி படரும் வரை கழுத்தில் நிலைத்திருக்கும் என்று இதற்கு அர்த்தம். மாசி மாத சங்கடஹர சதுர்த்தியின் போது விரதமிருந்து மஞ்சள் கயிறு மாற்றும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. மாசி சங்கடஹர சதுர்த்தியன்று மாலை நேரத்தில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் மஞ்சள் கயிறு மாற்றுவதற்கு உகந்த நேரமாகும். சங்கடஹர என்றால் துன்பங்களை அழித்தல் என்று பொருளாகும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விரதமிருந்து வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும். அதுவும் மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று இருக்கும் விரதம் துன்பங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை உடையது.
வளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனை பார்ப்பதை தவிர்க்கவேண்டும். பார்த்தால் ஞாபகசக்தி குறையும் என்று சொல்வார்கள். அதே சமயம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து சந்திரனை தரிசித்து விரதத்தை முடித்தால் ஞாபகசக்தி வளரும் என்பது நம்பிக்கை.
சங்கட ஹர சதுர்த்தி விரதமிருந்து வழிபடுவதால் அன்றாட வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். செவ்வாய்(அங்காரகன்) ஆல் ஏற்படும் தோஷங்கள் விலகும். திருமணத்தடை, குழந்தையின்மை குறைகள் நீங்கும்.
சனி கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி பதவி உயர்வு, ஆயுள் அபிருவித்தி கிடைக்கும்.
நாளை வியாழக்கிழமை. குரு வாரம். எனவே குருவார சங்கடஹர சதுர்த்தி என்பது ரொம்பவே விசேஷம்விநாயகருக்கு கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள்.
காரியத்தில் இருந்த தடைகளையெல்லாம் தகர்ப்பார்; காரியம் அனைத்தையும் வெற்றியாக்கித் தருவார் விநாயகர்.
பதியான சிவனை பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பாண்டவர்கள் கௌரவர்களை வெற்றி பெற சங்கட ஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து விநாயகர் அருளை பெற்றனர்.
சங்கடஹர சதுர்த்தி மந்திரம்:
ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா
பொது பொருள்:
பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர கணபதியே தங்களை நமஸ்கரிக்கிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்து இன்பம் அளிப்பவரே. பக்தர்கர்களோடு எப்போதும் நிலைகொள்பவரே. பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலையும் வெற்றிகொள்ள செய்பவரே. பக்தர்களை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெறுக செய்பவரே உங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.
சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் வாங்கும் நிலை ஏற்படாது.
Sankatahara Chathurthi Dates 2020 Date Day 13 January 2020 Monday 12 February 2020 Wednesday 12 March 2020 Thursday 11 April 2020 Saturday 10 May 2020 Sunday 09 June 2020 Tuesday 08 July 2020 Wednesday 07 August 2020 Friday 05 September 2020 Saturday 05 October 2020 Monday 04 November 2020 Wednesday 03 December 2020 Thursday
இத்தனை சிறப்புகள் வாய்ந்த சங்கட ஹர சதுர்த்தி விரதம் கடை பிடித்து கஷ்டங்களில் இருந்து விடைபெற கணபதியை தொழுவோமாக!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
நல்ல பகிர்வு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteநலம்தானே சுரேஷ் ஜி
ReplyDeleteThanks for sharing the good things about sangadahara chadurthi
ReplyDeleteRegards,
sai baba answers
Sai Baba Quotes
Sai Satcharitra in Tamil
Sai Satcharitra in Telugu
Sai Satcharitra in Marathi