தேவதை குழந்தைகள்!
குழந்தைகள் தினம்! கள்ளமில்லா அன்பை வெள்ளமாய் தரும் ஜீவன்கள்! கோபம் கூட மறைந்து போகிறது மழலையின் சிரிப்பில்! குழந்தைகள் எழுதும் எழுத்துக்கள் இல்லா சுவர்கள் தூய்மையாக இருந்தாலும் எதையோ இழந்து நிற்கின்றன! குழந்தை பூவாய் மலர்கையில் வாசமாகிறது வீடு குழ்ந்தைகள் தாத்தாவின் முதுகில் குதிரையேற்றம் நடத்துகையில் குழந்தையாகிறார் தாத்தா! கடவுள் கொடுத்த கடவுள் குழந்தை! குழந்தையின் மெத்தென்ற ஸ்பரிசம் பட்டதும் சத்திழக்கின்றன சண்டித்தனம் செய்த சங்கடங்கள்! எதிரியைக் கூட எளிதில் வீழ்த்துகிறது குழந்தையின் சிரிப்பு! அப்பாவோடு ஒட்டிக்கொள்கின்றன பெண்குழந்தைகள்! அம்மாவோடு நெருக்கம் காட்டுகின்றன ஆண்குழந்தைகள்! எதிர்பாலின ஈர்ப்பு! என்றாலும் எல்லாக் குழந்தைகளையும் ஈர்க்கின்றது தாத்தா உறவு! பிள்ளைகள் தவழ்கையில் ஈரமாகிறது பூமி! கண்ணாடிகளாய் குழந்தைகள்! நம்மை பிரதிபலிக்கிறது! நல்லதை ஊட்டுவோம் நல்லதை பெறுவோம்! உடைத்தால் சிதறும் பிடிக்க முடியாது! பிடிவாதங்கள்...
தங்களது அயராது உழைப்பு இதழில் வெளிப்படுகிறது வாழ்த்துகள் பாராட்டுக்குரியது
ReplyDelete*தனி ஒருவன் - தீபாவளி மலர்!
ReplyDelete*ஓ... 'தேன்சிட்டு தீபாவளி மலர்' என்பதற்கு பதிலாக, இப்படி போட்டுவிட்டேனே? இருந்தாலும் சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளேன்!
*விகடன், கல்கி, அமுதசுரபி, கலைமகள், தினமணி, தினகரன், இந்து தமிழ்திசை, சுப்ரஜாவின் டிஜிடல் தீபாவளி மலர் ஆகிய மலர்களின் தரத்திற்கு இணையாக, 156 பக்கங்களில் ஒரு மலரை, தனி ஒருவனாக வடிவமைத்துள்ளார் ஆசிரியர்!
'பாங்காக் அ. முஹம்மது நிஜாமுத்தீன்'
*எழுதிய 'அம்மா சொன்ன கதை'யை ஆசிரியர் வெளியிட்டுள்ளார்! (நன்றி சுரேஷ் பாபு சார்!)
*இதழை அச்சு காகித வடிவில் வெளியிட்டிருக்கலாம் என ஓர் ஆதங்கம் ஏற்படுவது உண்மை!
*அட்டையில் அழகான நடிகையின் படத்திற்கு பதிலாக, மிக அழகான குழந்தைகள் அல்லது இயற்கை அழகுகள் அல்லது தீபாவளி உற்சாக படங்கள் ஏதாவதொன்றை வெளியிட்டிருக்கலாம் என நினைக்கிறேன்!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.