தேவதை குழந்தைகள்!
குழந்தைகள் தினம்! கள்ளமில்லா அன்பை வெள்ளமாய் தரும் ஜீவன்கள்! கோபம் கூட மறைந்து போகிறது மழலையின் சிரிப்பில்! குழந்தைகள் எழுதும் எழுத்துக்கள் இல்லா சுவர்கள் தூய்மையாக இருந்தாலும் எதையோ இழந்து நிற்கின்றன! குழந்தை பூவாய் மலர்கையில் வாசமாகிறது வீடு குழ்ந்தைகள் தாத்தாவின் முதுகில் குதிரையேற்றம் நடத்துகையில் குழந்தையாகிறார் தாத்தா! கடவுள் கொடுத்த கடவுள் குழந்தை! குழந்தையின் மெத்தென்ற ஸ்பரிசம் பட்டதும் சத்திழக்கின்றன சண்டித்தனம் செய்த சங்கடங்கள்! எதிரியைக் கூட எளிதில் வீழ்த்துகிறது குழந்தையின் சிரிப்பு! அப்பாவோடு ஒட்டிக்கொள்கின்றன பெண்குழந்தைகள்! அம்மாவோடு நெருக்கம் காட்டுகின்றன ஆண்குழந்தைகள்! எதிர்பாலின ஈர்ப்பு! என்றாலும் எல்லாக் குழந்தைகளையும் ஈர்க்கின்றது தாத்தா உறவு! பிள்ளைகள் தவழ்கையில் ஈரமாகிறது பூமி! கண்ணாடிகளாய் குழந்தைகள்! நம்மை பிரதிபலிக்கிறது! நல்லதை ஊட்டுவோம் நல்லதை பெறுவோம்! உடைத்தால் சிதறும் பிடிக்க முடியாது! பிடிவாதங்கள்...
தேன்சிட்டு - ஓராண்டு காலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும் பல ஆண்டுகள் வெளிவர வாழ்த்துகள்.
ReplyDeleteஎனது பயணக் கட்டுரையும் இவ்விதழில் இடம் பெறுவது அறிந்து மகிழ்ச்சி.
படிக்கப் படிக்க அருமையாக உள்ளது. ஓராண்டிற்குள் நல்ல முன்னேற்றம். வாழ்த்துகள்.
ReplyDeleteமிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் பாராட்டுக்குரியது
ReplyDelete