தேவதை குழந்தைகள்!
குழந்தைகள் தினம்! கள்ளமில்லா அன்பை வெள்ளமாய் தரும் ஜீவன்கள்! கோபம் கூட மறைந்து போகிறது மழலையின் சிரிப்பில்! குழந்தைகள் எழுதும் எழுத்துக்கள் இல்லா சுவர்கள் தூய்மையாக இருந்தாலும் எதையோ இழந்து நிற்கின்றன! குழந்தை பூவாய் மலர்கையில் வாசமாகிறது வீடு குழ்ந்தைகள் தாத்தாவின் முதுகில் குதிரையேற்றம் நடத்துகையில் குழந்தையாகிறார் தாத்தா! கடவுள் கொடுத்த கடவுள் குழந்தை! குழந்தையின் மெத்தென்ற ஸ்பரிசம் பட்டதும் சத்திழக்கின்றன சண்டித்தனம் செய்த சங்கடங்கள்! எதிரியைக் கூட எளிதில் வீழ்த்துகிறது குழந்தையின் சிரிப்பு! அப்பாவோடு ஒட்டிக்கொள்கின்றன பெண்குழந்தைகள்! அம்மாவோடு நெருக்கம் காட்டுகின்றன ஆண்குழந்தைகள்! எதிர்பாலின ஈர்ப்பு! என்றாலும் எல்லாக் குழந்தைகளையும் ஈர்க்கின்றது தாத்தா உறவு! பிள்ளைகள் தவழ்கையில் ஈரமாகிறது பூமி! கண்ணாடிகளாய் குழந்தைகள்! நம்மை பிரதிபலிக்கிறது! நல்லதை ஊட்டுவோம் நல்லதை பெறுவோம்! உடைத்தால் சிதறும் பிடிக்க முடியாது! பிடிவாதங்கள் உடைபட்டுப்போகின்றன க
இதழ் பார்த்தேன். இதில் இடம்பெற்றிருக்கும் கீதா ரெங்கனின் 'வைராக்கியம்' சிறுகதை எங்கள் தளங்களில் ஒன்றான "நம்ம ஏரியா" பகுதியில் கீதா ரெங்கனால் அனுப்பப்பட்டு வெளியிடப்பட்ட சிறுகதை. கீதாவுக்காவது இப்படி எடுக்கப் பட்டிருப்பது தெரியுமா என்று தெரியவில்லை. சொல்லாமல் எடுப்பது சரியா சுரேஷ்?
ReplyDeletehttps://engalcreations.blogspot.com/2017/10/5_14.html#more
தவறுக்கு வருந்துகிறேன் சார். இந்த கதை அவரது தளத்தில் இருந்துதான் எடுத்தேன். அப்புறம் தான் தெரிந்தது அந்த கதை உங்களது தளத்தில் வந்தது என்று. கீதா அவர்களும் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லுமாறு கூறியிருந்தார். பணிச்சூழல், மற்றும் எனது கணிணி பழுது அடைந்தது மற்றும் என் தந்தையாருக்கு திடீரென உடல்நலம் பாதித்தமையால் இரண்டு வாரங்களாக இணையம் வர இயலாமல் போனதாலும் உங்களது காண்டாக்ட் நெம்பர் என்னிடம் இல்லாது போனதாலும் உடனே தங்களுக்கு தெரிவிக்க இயலாமல் போனது. நமது வலைப்பூ நண்பர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இந்த கதை எடுத்தாளப்பட்டது.தவறுக்கு மீண்டும் வருந்துகிறேன். இனி கவனமாக நடந்துகொள்கிறேன். சங்கடமான சூழ்நிலையை கீதா மேடத்திற்கு ஏற்படுத்தியதற்காக அவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!
Delete