நல்ல வைத்தியன்! பாப்பா மலர்!
நல்ல வைத்தியன்! பாப்பா மலர்! சின்னம்பேடு என்ற கிராமத்தில் சீனிவாசன் என்ற வைத்தியர் ஒருவர் வசித்து வந்தார். எத்தகைய நோயாக இருந்தாலும் தீர்த்துவிடும் ஆற்றல் அவருக்கு உண்டு. பல்வேறு வைத்திய நூல்களை கற்று எல்லாவிதமான மூலிகை மருத்துவங்களையும் படித்து இருந்தார். அதனால் அவ்வூரில் மட்டும் அல்ல பல சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும் அவரிடம் வைத்தியம் பார்க்க குவிந்தனர். அதனால் அவரது செல்வாக்கு கூடியது. அவருக்கு தலைக்கனமும் உண்டாகியது. அவரை சந்திக்க வைத்தியம் செய்து கொள்ள முன்கூட்டி அனுமதி பெற்று வரவேண்டும் என்ற சூழலும் உருவாகியது. இருப்பினும் அவரிடம் வைத்தியம் செய்து கொள்ள நிறைய பேர் விரும்பியதால் வருமானம் செழித்து வந்தது. வைத்தியம் பார்ப்பது மட்டும் இல்லாமல் வைத்தியம் கற்றுக்கொடுக்கவும் செய்தார் அவர். அவரிடம் பல சீடர்கள் மருத்துவம் கற்றுக்கொண்டு உதவி செய்து வந்தனர். அதில் ஒருவன் நல்ல முத்து. நல்ல அறிவாளி திறமை சாலியும் கூட. நல்ல முத்து நோய்நாடி நோய் முதல் நாடி என்பது போல நோய் எதனால் வந்தது என்பதை நோயாளியின் பேச்சில் இருந்தே அறிந்து கொண்டு அதற்கேற்ப வைத்திய...