கார் கட்டு!
கார் கட்டு! அந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து நகரினுள் வேகமாக நுழைந்தது பெருவேகமாய் வந்த கார். காரை ஒரு இருபது வயது இளம் யுவதி செலுத்திவர மேலே பேனெட்டில் இளைஞன் ஒருவன் கட்டப்பட்டிருந்தான். அவன் வாய், ஏய்… நிறுத்து…! நிறுத்து..! ஸ்டாப்…! ஸ்டாப்..! ஸ்டாப் தட் இடியட் கேர்ள்! இதற்கெல்லாம் நீ அனுபவிப்பாய்! என்று கத்திக் கொண்டிருக்க, கடைத்தெருவில் காய்கறி வாங்குவதிலும் மளிகைப் பொருட்களை வாங்குவதுமாய் இருந்தவர்களும் உடன் பயணித்த வாகனத்தில் இருந்தவர்களும் வித்தியாசமாய் பார்த்தார்கள். ஏய்.. அதோ பாருடா! காரு மேல ஒருத்தன் கட்டிப் போட்டிருக்கு..! சினிமா ஷூட்டிங்கா? அந்த பொட்டைப் பொண்ணுக்கு என்னா துணிச்சல் இருந்தா ஒரு ஆம்பளையை இப்படி கார்மேல கட்டி வச்சிக்கிட்டு போவும்…! ஆளாளுக்கு முணுமுணுத்தார்களே தவிர ஒருவரும் அந்த காரை மடக்கவோ வழிமறிக்கவோ இல்லை. கார் மிகவேகமாக அந்த நகரத்தைக் கடந்து ஒரு கிளைச்சாலையில் பிரவேசித்தது. ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்று ...