கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 99
1.அதோ போறாரே அவருக்கு பெரிய கோடீஸ்வரர் ஆகிற வாய்ப்பு வந்திருக்குது...!
எப்படிச்சொல்றே?
”அப்பல்லோ”விற்கு இட்லி சப்ளை செய்யற காண்ட்ராக்ட் கிடைச்சிருக்காம்!
2.தலைவர் பேசிக்க்கிட்டிருக்கும் போதே கூட்டம் கலைஞ்சு ஓடுதே ஏன்?
தலைவர் பேசி முடிச்சதும் “பிரியாணி” வழங்கப்படும்னு அறிவிப்பு வந்துருச்சாம்!
3.கட்சி தொடங்கறதா அறிவிச்சு இன்னியோட ஒரு வருஷம் முடியப்போவுது தலைவரே...!
அப்போ திரும்பவும் ஒரு மீள் அறிவிப்போட புதுப்படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியிருக்கும்னு சொல்லு!
4. மன்னருக்கு “நாக்கு ருசி” அதிகம்னு எப்படி சொல்றே?
ராப்பிச்சை வேஷத்துலேயே தினமும் நகர்வலம் போறாரே...!
5.புலவரே என்னைப் போற்றி ஏதாவது பாடுங்களேன்...!
இப்படித்தான் எதையாவது சொல்லி “என் வாயைக் கட்டிப்போட்டுவிடுகிறீர்கள் மன்னா!
6.மன்னரின் வில்லோடு விளையாட நிறைய பேர் காத்திருக்கிறார்களாமே...!
நீ வேற அவர் பேரப்பிள்ளைகள் வில்லை வைத்து விளையாடுவதைத்தான் அப்படிச்சொல்லித் திரிகிறார்!
7.அந்த மேனேஜர் தீவிர விஜய் ரசிகராம்!
8.கட்சியிலே ”குழுத்துரோகம்” பண்ணிட்டாங்கன்னு சிலரை தலைவர் நீக்கினாரே எதுக்கு?
”வாட்சப் குழு” ஒண்ணு போட்டியா ஆரம்பிச்சவங்களைத்தான் அப்படி சொல்லி நீக்கியிருக்காரு!
9.போர்க்களத்தில் மன்னர் எதற்கு டாஸ் போட்டு பார்க்கிறார்?
9.போர்க்களத்தில் மன்னர் எதற்கு டாஸ் போட்டு பார்க்கிறார்?
சரணாகதி அடையலாமா புறமுதுகிட்டு ஓடலாமா என்று பார்க்கத்தான்.
10. தலைவர், மேடையில்: இடைக்கால நிவாரணமாய் வந்த இடைத்தேர்தலை புரட்டுக்கள் பேசி நிறுத்தி வைத்த எதிர் கட்சிகளை வன்மையாக கண்டிக்கிறேன்...!
11. யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னேங்கிறது தலைவர் வாழ்க்கையிலே சரியா போச்சு!
எப்படி சொல்றே?
முதல்ல ரெய்டு வந்தது! அப்புறம் கூட்டணி வந்திருக்கே...!
12. உங்க ஓட்டல்லே ரெய்டு வந்தது பத்தி என்ன நினைக்கிறீங்க...!
அந்த விஷயத்தை இன்னும் ஜீரணிக்கவே முடியலைங்க!
13. எதிரி அசந்து போய் நின்றுவிட்டானாமே...!
ஆம் நம் மன்னர் இவ்வளவு வேகமாக ஓடுவார் என்று எதிர்பார்க்கவே இல்லையாம்!
14. தலைவர் வாழ்க்கையிலே புயல் ஓர் வசந்தத்தையே ஏற்படுத்திவிட்டுருச்சாமே...!
சும்மாவே பின்னே...! பல கோடி நிவாரணப் பொருட்களை ஏப்பம் விட்டிருக்காரே...!
15. இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை! தானா சேர்த்த கூட்டம்...!
பீச்சுலே காத்து வாங்க வந்த தலைவருக்கு அலம்பலைப் பாரு....!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
எல்லாமே ஸூப்பர் நண்பரே
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteஎல்லாமே மிக அருமை.
ReplyDeleteமறு அறிவிப்பு புதுப்பட வெளியீடு படிக்க ஜோக் பார்க்க வயிதெரிச்சல்
ReplyDeleteAwesome blog you have herre
ReplyDelete