Posts
Showing posts from January, 2019
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 99
- Get link
- X
- Other Apps

1.அதோ போறாரே அவருக்கு பெரிய கோடீஸ்வரர் ஆகிற வாய்ப்பு வந்திருக்குது...! எப்படிச்சொல்றே? ”அப்பல்லோ”விற்கு இட்லி சப்ளை செய்யற காண்ட்ராக்ட் கிடைச்சிருக்காம்! 2.தலைவர் பேசிக்க்கிட்டிருக்கும் போதே கூட்டம் கலைஞ்சு ஓடுதே ஏன்? தலைவர் பேசி முடிச்சதும் “பிரியாணி” வழங்கப்படும்னு அறிவிப்பு வந்துருச்சாம்! 3.கட்சி தொடங்கறதா அறிவிச்சு இன்னியோட ஒரு வருஷம் முடியப்போவுது தலைவரே...! அப்போ திரும்பவும் ஒரு மீள் அறிவிப்போட புதுப்படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியிருக்கும்னு சொல்லு! 4. மன்னருக்கு “நாக்கு ருசி” அதிகம்னு எப்படி சொல்றே? ராப்பிச்சை வேஷத்துலேயே தினமும் நகர்வலம் போறாரே...! 5.புலவரே என்னைப் போற்றி ஏதாவது பாடுங்களேன்...! இப்படித்தான் எதையாவது சொல்லி “என் வாயைக் கட்டிப்போட்டுவிடுகிறீர்கள் மன்னா! 6.மன்னரின் வில்லோடு விளையாட நிறைய பேர் காத்திருக்கிறார்களாமே...! நீ வேற அவர் பேரப்பிள்ளைகள் வில்லை வைத்து விளையாடுவதைத்தான் அப்...
அனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்!
- Get link
- X
- Other Apps

அனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்! ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் வசிக்கும் ஸ்ரீ ராமதூதன் அனுமன் அவதரித்த நாள் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் ஆகும். இது ஸ்ரீ அனுமன் ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. அனுமனுக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளன. வாயுதேவனுக்கும் அஞ்ஜனா தேவிக்கும் மகனாக உதித்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்பலி, மகாவீரர் என்ற பலபெயர்கள் உண்டு. சீதையை வனத்தில் கண்ட செய்தியை இராமனுக்கு சமயோசிதமாக கண்டேன் சீதையை என்று சொல்லியதால் சொல்லின் செல்வன் என்ற பெயரும் அனுமனுக்கு உண்டு.ராமனுக்கு பணிவிடை செய்து இராமநாபஜெபம் செய்து தன்னடக்கத்துடன் வாழ்ந்தவர் அனுமன். எத்தனையோ பராக்கிரமங்கள் செய்யினும் அடக்கத்தின் திருவுருவாக திகழ்ந்தவர் அனுமன். அனுமன் கடலைதாண்டியது பற்றி ராமன் ஓரிடத்தில் கேட்கிறார் அனுமா! நீ எப்படி கடலைத் தாண்டினாய்? அனுமன் அடக்கத்துடன் பதில் அளித்தார். எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் தான்! என்று.இதைவிட அனுமனின் பணிவான குணத்திற்கு எடுத்துக்காட்டு தேவையில்லை. ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவன், விபீஷணன்,...