தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


கடத்தல் தொழில்!
கட்டிப் போட முடியவில்லை!
காற்று!

பறிக்காமல் விட்ட பூக்கள்!
தற்கொலை செய்து கொண்டன
மாலைநேர மரத்தடி!

விரிசல் விட்ட சுவர்கள்!
விரைவாய் முளைத்தன
குற்றுச்செடிகள்!

இருண்ட இரவின் தனிமை
பயப்படுத்தி பார்த்தன
சில்வண்டுகள்!

இருண்ட பாதை!
எங்கோ ஒளிரும் விளக்கு
வெளிப்படுத்துகிறது கிராமத்தை!

பலநாள் சேமிப்பு!
ஒரேநாளில் அழிப்பு!
இளநீர்!

வெம்மை
அழைத்து வருகின்றது
அம்மை!

ஓசையிட்டு உயரே பறக்கிறது
உயிரில்லா பறவை!
விமானம்!

எனக்குமட்டும் திரையிடப்படுகிறது
தினம் தோறும்புதுப்படம்!
கனவு!


மிதித்தாலும்  
அழாமல் ஓடுகின்றது
மிதிவண்டி!

உயிர் இல்லாவிடினும்
உடன் வருகின்றது
நிழல்!

ஈரம் வற்றிப் போனதும்
அறுந்து போகின்றது
பற்று!

உலர்ந்த புற்கள்
ஒளியிழந்தது
நிலம்!

பெரிதாய் தெரிந்தது
வெள்ளைத் துணியில்
பொட்டாய் கறை!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. படிக்கும்போது நாமும் எழுதலாமே என்று தோன்றுகிறது. அப்புறம் முயற்சி செய்தால் கஷ்டமாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காவது கஷ்டமாக இருக்கிறது ஆனால் எனக்கு வரவேமாட்டேன் கிறது.... எனக்கு வருவது கலாய்ப்புமட்டுமே அதுவும் நம் தலைவர்கள் இருக்கும் வரைதான்

      Delete
  2. அனைத்துமே அருமை..... பாராட்டுகள்.

    ReplyDelete
  3. நல்லாருக்கே...வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  4. வழக்கம்போல அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஒவ்வொருத்துவருக்கும் ஒவ்வொரு திறமை உங்களுக்கோ இந்த மாதிரி ஹைக்கூ கவிதை எழுதுவதில் மிக திறமை இருக்கிறது வழக்கம்போல அருமை. வாழ்த்துகள் &பாராட்டுக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2