தளிர் ஹைக்கூ கவிதைகள்! 5
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
பரபரப்பான உலகில்
அமைதியாக நின்றது
சிலை!
மழை
பூமிக்கு குடை
காளான்கள்!
கூரையில்
இத்தனை பொத்தல்களா?
இரவு வானம்
ஓயாது உழைத்தவன்
ஓய்வெடுத்தால் ஒப்பாரி
மரணவீடு
பார்த்து சிரித்தன
மலர்கள்
இரைச்சலில்
தொலைந்து போனது
மவுனம்.
காற்றை விற்று
சோற்றை வாங்குகிறான்
யாருக்கு கை
அசைக்கின்றன
நாணல்கள்!
வான்மகளுக்கு
இத்தனை போட்டியா
மேகங்கள்!
நிலவு தேயத் தேய
ஒளி இழக்கிறது
பூமி!
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!
Comments
Post a Comment