குழந்தைகள் தினம்! கள்ளமில்லா அன்பை வெள்ளமாய் தரும் ஜீவன்கள்! கோபம் கூட மறைந்து போகிறது மழலையின் சிரிப்பில்! குழந்தைகள் எழுதும் எழுத்துக்கள் இல்லா சுவர்கள் தூய்மையாக இருந்தாலும் எதையோ இழந்து நிற்கின்றன! குழந்தை பூவாய் மலர்கையில் வாசமாகிறது வீடு குழ்ந்தைகள் தாத்தாவின் முதுகில் குதிரையேற்றம் நடத்துகையில் குழந்தையாகிறார் தாத்தா! கடவுள் கொடுத்த கடவுள் குழந்தை! குழந்தையின் மெத்தென்ற ஸ்பரிசம் பட்டதும் சத்திழக்கின்றன சண்டித்தனம் செய்த சங்கடங்கள்! எதிரியைக் கூட எளிதில் வீழ்த்துகிறது குழந்தையின் சிரிப்பு! அப்பாவோடு ஒட்டிக்கொள்கின்றன பெண்குழந்தைகள்! அம்மாவோடு நெருக்கம் காட்டுகின்றன ஆண்குழந்தைகள்! எதிர்பாலின ஈர்ப்பு! என்றாலும் எல்லாக் குழந்தைகளையும் ஈர்க்கின்றது தாத்தா உறவு! பிள்ளைகள் தவழ்கையில் ஈரமாகிறது பூமி! கண்ணாடிகளாய் குழந்தைகள்! நம்மை பிரதிபலிக்கிறது! நல்லதை ஊட்டுவோம் நல்லதை பெறுவோம்! உடைத்தால் சிதறும் பிடிக்க முடியாது! பிடிவாதங்கள்...
அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்! அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந்த மரத்தின் விதைகள், வேர், பட்டைகள் முதலியன பயன்படுகிறது. இதில் ஒருவகை மரம் வேர் அழிஞ்சில் என்பதாகும். ஏறிழிஞ்சி: ஏறு+ இழிஞ்சி என்பதே இவ்வாறு ஏறிழிஞ்சி என சேர்ந்து புணர்ந்தது. இழிஞ்ச மரத்து விதைகள் கீழே விழுந்து மீண்டும் மரத்தில் ஏறி ஒட்டிக் கொள்ளும் வித்தியாசமான மரமே ஏறிழிஞ்சி. இது தெய்வீக மரமாகும். அழிஞ்சி, அழிஞ்சில், வேர் அழிஞ்சில் என்றும் இந்த மரம் வழங்கப்படுகிறது. இந்த வேர் அழிஞ்சில் மரமானது பங்குனி, சித்திரை,மாதங்களில் பூத்து குலுங்குகிறது. பூக்கள் நறுமணம் வீசும். நல்ல அழகுடையது. ஆனி மாதத்தில் இதன் காய்கள் பழமாகின்றன. பழுத்த பழங்கள் கீழே விழுகின்றன. விழுந்த விதைகள் சில தேர்ந்தவிதைகள் நகர்ந்து ஏறி அடிமரத்திலும் கிளைகளிலும் ஒட்டிக் கொள்கின்றன. இவ்வாறு மரத்தில் ஒட்டிய விதைக் கூடுகளை பிரித்து எடுக்கவே முடியாது. நூற்றுக்கணக்கான விதைக் கூடுகளை எக்காலத்திலும் பார்க்க முடியும். ...
உங்கள் கணவரை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? 'ஆமாம், ஆமாம்' என்று நீங்கள் அதி வேகமாக பதி்ல் சொல்வது தெரிகிறது. கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய்யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா.. காதலர்கள் மட்டும் தான் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றில்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லலாமே. தினமும் உங்கள் கணவரிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் ஐ லவ் யூ டூ டா செல்லம் என்று சொல்வார். கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும். கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார். என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு க...
Comments
Post a Comment