Posts

Showing posts from May, 2018

தினமணி இணையதளக்கவிதை

தினமணி கவிதை மணியில் இந்த வாரம் வெளியான எனது கவிதை கருவில் தொலைந்த குழந்தை:  நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  12th May 2018 06:32 PM   |    அ+ அ  அ-     |   கருவொன்று உருவாகையில் ஊற்றெடுக்கும் வெள்ளம்! உருவாக்கம் கொடுக்கையில் உபத்திரவங்கள் அள்ளும்! முழுதாக முடிக்க நினைக்கையில் பழுதாகி பாதியில் நிற்கும் படைப்பு! உழுது விளைந்த நிலத்தில் கொல்லியாய் பூச்சிகள் போல எழுத விளைந்த மனத்தில் கொல்லியாய் வறட்சி! கருவிலே தொலைந்த குழந்தையின் காணாமுகமாய் உருவிலே வடிக்க முடியா படைப்புக்கள் பாதியில்! தெருவிலே வரையும் ஓவியம் மிதிபட்டு மறைந்து போவது போல கருவிலே உருவாகும் கற்பனைகள் காட்சிகள் எண்ணங்கள் உடைபட்டு சிதைந்து போகும்! இயற்கையும் சூழலும் இனிமையான பொழுதும் கிடைக்கையில் எண்ணப்பிரவாகையில் உதிக்கும் முத்துக்கள் நல்ல கருவாகும்! கருவான பின்னாலே மனதிலே சஞ்சலமும் சலனமும் மறைந்து நின்றால் மகிழ்வாக பிறந்திடும் படைப்பு! சஞ்சலங்கள் துன்பங்கள் சலனங்கள் சலிப்புக்கள் பெருக...

கல்கியில் பிரசுரமான எனது நொடிக்கதை!

Image
ஒன்றரை வருடங்களுக்கு பிறகு எனது படைப்பு கல்கியில் இந்த வாரம் பிரசுரம் ஆனது. அது கீழே! 

கொலுசு மின்னிதழில் பிரசுரமான குட்டிக்கதைகள்!

Image
கொலுசு மின்னிதழில் எனது படைப்புக்கள் பிரசுரமாவது நீங்கள் அறிந்ததே மே மாத கொலுசு இதழில் எனது மூன்று குட்டிக்கதைகள் பிரசுரமாகின. அவை உங்களின் பார்வைக்கு! நன்றி!

இந்துவில் போன மாதம் வெளியான எனது பஞ்ச்கள்!

Image
தமிழ் இந்து நாளிதழில் போன மாதம் வெளியான எனது இரண்டு பஞ்ச்கள் உங்கள் பார்வைக்கு.

தங்க மங்கை மாத இதழில் போன மாதம் பிரசுரமான என் கதை!

Image
தங்க மங்கை மாத இதழில் ஏப்ரல் மாத இதழில் எனது கதை ஒன்று பிரசுரமானது. பலரும் பாராட்டினார்கள். பிரபல எழுத்துலக ஜாம்பாவன் ராஜேஷ் குமார் சாரும் இந்த கதை நன்றாக இருந்ததாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த திருஷ்டியோ என்னமோ இந்த மாதம் கதை அனுப்பியும் ஒன்றும் பிரசுரம் ஆகவில்லை!  சென்றமாதம் பிரசுரமான கதை உங்கள் பார்வைக்கு. ஒரு ரகசியம் உங்களுக்கு மட்டும் இது நம்ம ப்ளாக்கில் ஏற்கனவே எழுதின கதைதான்.