Posts

Showing posts from February, 2017

நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்!

Image
நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்! வழிபாடு எத்தனையோ விதம்! நம்மை படைத்து ஆட்டுவிக்கும் இறைவனுக்கு விதவிதமாய் அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து நிவேதனங்கள் படைத்து ஆராதித்து மகிழ்வது தமிழர் பண்பாடு.     விதவிதமான மலர்கள், பட்டாடைகள், காய் கனிகள் என்று வகைவகையாக அலங்காரங்கள் செய்வதுண்டு. அதே போல படையலும் விதவிதமான அன்னங்களுடனும் பட்சணங்கள் பழங்களுடன் படைப்பது உண்டு.      அதில் வித்தியாசமான ஒன்றுதான்! படைக்கும் படையலில் ஆண்டவன் பிம்பத்தை காண்பது. சர்க்கரை பொங்கலை குளமாக்கி அதனுள் நெய்யை உருக்கி விட்டு அதில் சுவாமியின் பிம்பத்தை கண்டு வழிபடுவது ஓர் மரபு.     இதை அன்னப்பாவாடை, மஹா நைவேத்தியம், பள்ளயம், என்று பலவாறாக சொல்லுவர். பெயர் வேறு வேறாக இருந்தாலும் செயல் ஒன்றுதான். ஆண்டவன் தரிசனமும் அவனது கருணையும் பெறுவதுதான் நோக்கம்.         அன்னம் விஷேசமான ஒன்று. எத்தனைதான் பொருளும் பணமும் கொடுத்தாலும் மனம் நிறையாது. அன்னத்தை தானம் அளிக்கும் போது மனசு மட்டுமல்ல வயிறும் நிறைகிறது. அரிசி லிங்க வடிவ...

இந்த வார பாக்யா பிப்ரவரி 3-9 இதழில் எனது ஜோக்ஸ்!

Image
இந்த வார பாக்யா பிப்ரவரி 3-9 இதழில் எனது ஜோக்ஸ்! இந்த வார பாக்யா இதழிலும் என்னுடைய ஜோக்ஸ்கள்   இடம் பெற்றுள்ளது. வாராவாரம் பாக்யா என்னை ஏமாற்றாமல் என் ஜோக்ஸ்கள் இடம்பெற்று வருவதில் எனக்கு மகிழ்ச்சியே!   இந்த வாய்ப்பினை நல்கிய பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும், எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கும் மற்றும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவின் நண்பர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகள்! இதோ நீங்கள் படித்து மகிழ என்னுடைய பாக்யா ஜோக்ஸ்! தங்கள் வருகைக்கு நன்றி! ஜோக்ஸ்களை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!