வருத்தமும் மகிழ்ச்சியும் - அறிவிப்பு!
அன்பான வாசக பெரு மக்களே கடந்த ஒரு மாதமாக உங்களை சந்திக்க இயலாமைக்கு மிகவும் வருந்துகிரேன். ஜி.என்.டி சாலை விரிவாக்க பணிகளின் காரணமாக எங்கள் பகுதிக்கு வரும் டெலிபோன் கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் ஒரு மாதமாக எங்கள் பகுதியில் பிராட்பேண்ட் சேவை பாதிக்கப்பட்டு இன்றுதான் மீண்டும் கிடைத்துள்ளது. இதனால் உங்களை தொடர்ந்து சந்திக்கவும் தகவல் பறிமாறவும் இயலாமல் போனது. மேலும் எங்கள் பரம்பரை திருக்கோயிலான நத்தம் வாலீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற 29-1-12 அன்று நடைபெற இருப்பதால் அந்த பணிகளில் ஈடுபட்டுவந்ததால் வேறு பகுதியில் இருந்து உங்களை தொடர்பு கொள்ள முடிய வில்லை. வாசகர்கள் அனைவருக்கும் எனது தாமதமான புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்!. 70 ஆண்டுகள் கழித்து எங்கள் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதும் அதற்கு ஆன்மீக அன்பர்கள் பண பொருளுதவிகள் அளித்து உதவி செய்வதும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.இதில் நானும் எனது தந்தையும் பங்கெடுத்து கொண்டு ஈடுபட இறைவன் வாலீஸ்வரன் அருள் கிடைத்தமைக்கும் எனது மகிழ்ச்சி! வாசக அன்பர்கள் இந்த கும்பாபிஷேகத்...