கஷ்டங்கள் போக்கும் கார்த்திகை சோமவார விரதம்.


கஷ்டங்கள் போக்கும் கார்த்திகை சோமவார விரதம்.


சோமன் என்ற சொல்லுக்கு உமா மகேஸ்வரர் என்ற பொருள். சந்திரனையும் சோமன் என்பர். ஒவ்வொரு மாதமும் திங்கட் கிழமை சோமவாரம் என்று வழங்கப்படுகிறது. சோமன் என்ற சம்ஸ்கிருத சொல்லின் தமிழாக்கம் திங்கள். திங்கள் என்றால் சந்திரன். சோமவாரத்திற்கும் சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தட்சனின் சாபத்தால் தேய்ந்து போன சந்திரன் சிவனை சரணடைந்து சாபவிமோசனம் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

  உலகம் முழுவதும் ஒளிவீசச்செய்யக்கூடிய சந்திரனின் சாபத்தை சிவபெருமான் நிவர்த்தி செய்த தினம் ஒரு கார்த்திகை மாத திங்கட்கிழமை ஆகும். க்ஷயரோகம் என்னும் உடல் தேயும் நோய்க்கு ஆளான சந்திரன் சிவனை சரணடைந்து மீண்டும் வளர ஆரம்பித்த தினமே கார்த்திகை சோமவாரம். இத்தகைய கார்த்திகை சோமவாரத்தில் நாம் சிவபெருமானை ஆராதித்து விரதம் இருந்து வழிபடுவதால் நம் வாழ்வை அரிக்கும் கஷ்டங்கள் விலகி இஷ்டங்கள் பூர்த்தியாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

  கார்த்திகை மாதம் இந்துக்களிடையே புனிதமான ஒரு மாதமாகவும் பலவிரதங்களை அனுஷ்டிக்கும் மாதமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இம்மாதத்தில் பல விரதங்கள் இருப்பினும் கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உரியது. இவ்விரதம் மிகவும் சிறப்புக்குரியதாக கொண்டாடப்படுகிறது. துன்பங்களை விலக்கி இன்பங்களை வாரிவழங்கக்கூடிய விரதமாக சோமவார விரதம் அமைகிறது.
க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம்பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு 'சந்திரசேகரர்' என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச்சோமவாரங்கள் (திங்கள்
 கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

இந்த நாட்களில் சிவாலயங்களில் 'சங்காபிஷேகம்' நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர்.
கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் சந்திரசேகர மூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும். மேலும் கார்த்திகை சோமாவார திருநாட்களில் சிவத்தலங்களைத் தரிசிப்பதும் கோடிபுண்ணியத்தைப் பெற்றுத் தரும். குறிப்பாக இறைவன் சிவனார்,
 சந்திரனின் பெயரை ஏற்று அருள்பாலிக்கும் தலங்களைத் தரிசிப்பது விசேஷம்.

கார்த்திகை சோமவார வழிபாடு பல்லாண்டுகளாக சிவாலயங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கார்த்திகை சோம வார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி அன்றாட அனுஷ்டானங்களை முடித்து சிவ பூஜை செய்ய வேண்டும். ஒரு வேதியர் தம்பதியினரை அழைத்து வந்து உபச்சாரங்கள் செய்து அவர்களுக்கு தங்களால் முயன்ற அளவு தானங்கள் அளித்து ஆசி பெறுதல் வேண்டும். அன்று பகல்பொழுது உண்ணாமல் இருந்து மாலையில் சிவதரிசனம் செய்து விட்டு முன்னிரவில் சிறு உணவு உண்டு உபவாசம் முடிக்க வேண்டும்.
 இவ்வாறு செய்ய முடியாதவர்கள் அன்று நீராடி சிவ ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற அபிஷேக திரவியங்களை சமர்ப்பித்து வழிபடுதல் வேண்டும். கார்த்திகை மாதத்தில் சிவபெருமான்; அக்னிப் பிழம்பாக இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவரை குளிர்விக்க சங்காபிஷேகம் செய்யப்படுகின்றது


கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில், கணவனும் மனைவியும் ஆலயங்களுக்குச் சென்று வருவது உத்தமம். அதனால் சிவ-சக்தியின் ஆசி கிடைத்து, காலம் முழுவதும் அந்தத் தம்பதியர் கருத்து வேறுபாடின்றி இணைந்திருப்பார்கள்.

இது தவிர கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் எந்த பூஜையாக இருந்தாலும், அது பன்மடங்கு பலன் அளிக்கக்கூடியதாகும். அந்த பூஜைகளால் பாவங்கள், வறுமை விலகி, வளமான வாழ்வு அமையும். கார்த்திகை மாதத்தில் ஸ்ரீமன் நாராயணர், ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் எழுந்தருள்வதாக ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில் கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால், மகா விஷ்ணுவுடன் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள்.

வில்வ இலையால் சிவனை பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சிப்பவர்கள், வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைவர். கார்த்திகை சோம வார நாளில், சங்காபிஷேக தரிசனம் செய்யுங்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்!

நம்வாழ்வின் கஷ்டங்களை போக்கி இஷ்டங்களை அடையச்செய்யும் கார்த்திகை சோமவார விரதம் இருப்போம்! கஷ்டங்களில் இருந்து விடுபடுவோமாக!.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!.


Comments

 1. அப்பாடா! ஒரு வழியா கமெண்ட் பண்ண வழி கண்டுபிடிச்சாச்சு! நாளையில் இருந்து எல்லா ப்ளாக்கிலும் தலை காட்டுவேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சற்று முன் இதை தான் யோசித்துக் கொண்டிருந்தேன்...

   Delete
 2. விளக்கமான பதிவு... நன்றி...

  ReplyDelete
 3. கார்த்திகை சோம வார விரதம் பற்றி அறியாதன அறிந்தேன். மகிழ்ச்சி. நன்றி.
  தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் சார்! என்னுடைய வேலைப்பளுவில் உங்கள் தளத்திற்கு வரமுடிவதில்லை! அதை பொருட்படுத்தாமல் என் தளம் வந்து வாழ்த்துரைக்கும் தங்கள் அன்பை என்றும் மறவேன்! சில பிரச்சனைகள் காரணமாக கருத்துரை இடமுடியாமல் இருந்தது. இனி வருவேன்! நன்றி!

   Delete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!