தினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு!

தினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள்! இன்று வெளியான  கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீழே! தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், தினமணி குழுமம், வலைப்பதிவு குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்!


இரை தேடும் பறவை: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 26th March 2018 04:12 PM  |   அ+அ அ-   |  
விடியல் பொழுதில் இரை தேடிப்பறக்கின்றன பறவைகள்!
நீண்ட நெடுந்தொலைவுப்பயணம் அது!
ஒய்வே இல்லாத சிறகசைப்புக்களுக்குப் பின்
ஒரு வயல்வெளியை காண்கையில் பசி எடுகின்றது பறவைகளுக்கு!
சில நெல்மணிகளை கொத்துகையில்
சீறி எழுகின்றது தாகம்! ஆழ்துளையிலிருந்து பீச்சியடிக்கும்
குழாயின் முனையில் மூக்கை நனைக்கையில்
தணிகின்றது தாகம்!  கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு சிலமணிகள்
சேகரித்து மீண்டும் நீண்ட பயணம்!
நகர மயமாதலில்  நலிந்துபோன பறவையினங்கள்
கூடுகட்டின மின்கம்பங்களில் குடியிருந்த குஞ்சுகளுக்கு
இரையூட்டுகையில் சிறகடித்து சத்தம் எழுப்பின குஞ்சுகள்!
வயல்வெளிகள் வான்முட்டும் மரங்கள்! பச்சைப்புல்வெளிகள்
எல்லாம் மறைந்து விண்முட்ட எழுந்து நிற்கும் கட்டிடங்கள்!
இறைதேடும் பறவையின் எல்லையை அதிகரிக்கச்செய்கின்றது!
எல்லைத்தாண்டி பறக்கையில் எதிர்பாரா விபத்துக்களும் அதிகம்!
அல்லலோடு அனுதினமும் இரை எடுக்கையில்
ஆயுள் கூட அபகரிக்கப்படலாம்! இரை தேடிவரும் எதிரிக்கூட்டதிற்கு
இரையாகிப்போகலாம்! இயற்கை அழிந்து போகையில்
செயற்கை வளர்ந்து வருகையில் இரைகூட விஷமாகிப் போகலாம்!
இருந்தும் இன்னும் இரை தேடி பறக்கின்றன பறவைகள்!
இயக்கம் தொடர்ந்து இயங்கிட  இருப்பை உறுதி செய்திட
இரையைத் தேடி பயணிக்கின்றன பறவைகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. //இயக்கம் தொடர்ந்து இயங்கிட இருப்பை உறுதி செய்திட
    இரையைத் தேடி பயணிக்கின்றன பறவைகள்!//
    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது சுரேஷ்...

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. அருமை
    வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!