நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 32

நொடிக்கதைகள்! பகுதி 32


உதவி!
பொண்ணு காலேஜ் ஃபைனல் இயர் படிக்குது! முடிச்சதுமே கல்யாணம் முடிச்சிறலாம்னு இருக்கோம்! தரகரிடம் சொல்லுகையில்  படிப்புக்கு எந்த பையனும் உதவி பண்ணலையே? என்று கேட்டார் தரகர்.

சர்க்கரை!
   சர்க்கர இல்லாம ஒரு டீ போடுப்பா! என்று டீக்கடையில் ஆர்டர் செய்தார் கரும்பு ஆலை அதிபர்.

வாடை!
   பாய் வந்து  கடை முழுதும் சாம்பிராணி போட்டதும் கருவாட்டு கடைக்காரர், “இன்னா பாய் இப்படி பண்ணிட்டே உள்ளே உட்கார முடியலை?”  என்றவாரே எழுந்து வெளியே சென்றார்.


பசி:
    உபவாசம் இருந்தவனின் பசியைக் கிளறிவிட்டது பக்கத்து வீட்டு சமையல் வாசனை
.
உறக்கம்!
   விடிய விடிய வாட்சப் சேட்டிங் செய்தவனின் அலைபேசி உறங்கியது பேட்டரி சார்ஜ் தீர்ந்தமையால்!

நாடகம்!
    நடிகர்கள் எல்லோரும் அரசியலுக்கு வந்ததும் அரசியல் வாதிகளின் நடிப்பு அடிபட்டுப்போனது.

விற்ற தரிசனம்!
    50, 100, 200 என தொகை வாரியாக விதவிதமான டிக்கெட்டுக்களில் விற்கப்பட்டது கடவுளின் தரிசனம்.

ப்ரேக்கிங் நியுஸ்!

    ”ரெண்டு நாளா ஒரு ப்ரேக்கிங் நியுஸுமே போடலை!”  சேனல் சுத்த போர் அடிக்குது என்று சேனலை மாற்றினான் வினோத்.

உயரம்!

   தரிசனம் பார்த்துவிட்டு மலையை விட்டு இறங்கி வருகையில் உயரத்துக்கு சென்று கொண்டிருக்கிறார் கடவுள்.

விளை நிலம்!
      மழை பெய்ஞ்சதுன்னா! உங்க வீட்டு வாசல்படியிலே  தண்ணி வந்து நிக்கும்! அவ்வளவு சூப்பரான  மனை சார் இது என்று சொல்லிக்கொண்டிருந்தான் விளை நிலத்தை வீட்டு மனையாக்கியவன்.

ட்ரெக்கிங்க்!
   ஆள் நடமாடவே முடியாத அத்துவானக் காடு! யாருக்கும் அனுமதி கிடைக்காது!வெட்ட வேண்டிய இடத்திலே வெட்டி பர்மிஷன் வாங்கியிருக்கேன்! அட்வென்ச்சரா இருக்கும் என்று குழுவினரோடு கிளம்பியவனை சுற்றி வளைத்துக்கொண்டது ”தீ”


வெற்றிடம்!
  “அரசியல்ல நிறைய வெற்றிடம் இருக்கு! அதை நிரப்பத்தான் நான் களத்தில் குதிக்கிறேன்! என்று நடிகர் சொன்னதும் சினிமாவிலே இருக்கிற வெற்றிடத்தையே உங்களாலே நிரப்ப முடியலையே என்று கேட்டார் நிருபர்.

நெம்பர்!
   பத்துவருஷமா இந்த நெம்பர்தான் உபயோகிக்கிறேன்! திடீர்னு நெட்வொர்க்கை மூடிட்டாங்க! வேற நெட்வொர்க் மாற கஷ்டமா இருக்கு! என்றவர் பதினைந்து வருஷமாக தான் இருந்த கட்சியை விட்டு புதுக்கட்சியில் இணைந்தார்.

வாட்சப்!
       ஏண்டி! நான் உனக்கு எத்தனை நாள் பழக்கம்! உன் வீட்டுல பங்க்‌ஷன் நடந்திருக்கு!  ஒரு வாட்சப் பண்ணி  போட்டோ அனுப்பி இருந்தா என்ன கொறைஞ்சா போயிடுவே? என்று தோழியை கடிந்து போனில் கடிந்து கொண்டாள் லதா!


Comments

  1. எல்லாமே ஸூப்பர் நண்பரே இரசித்தேன்.

    ReplyDelete
  2. ரசித்தேன் அனைத்தையும்.

    ReplyDelete
  3. ரசித்தோம் அனைத்தையும்!!

    கீதா

    ReplyDelete
  4. நொடியில் படித்தேன் ரசித்தேன். நல்ல முயற்சி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!