தினமணி கவிதை மணியில் என் கவிதை!

இன்றைய தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து ஆதரவளிக்கும் தினமணி குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்!

நினைவுப்பெட்டகம் 2017: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 31st December 2017 02:29 PM  |   அ+அ அ-   |  
வாழ்க்கை பயணத்தில்
ஒவ்வோர் ஆண்டும் ஒரு மைல் கல்லே!
ஆண்டுகள் மறைந்தாலும் அவ்வாண்டின்
நிகழ்வுகள் என்றும் நம் மனத்தினுள்ளே!

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு
மல்லுக்கட்டிய மாணாக்கர் கூட்டம்!
அரசியல் சதுரங்கத்தில் வெட்டுபட்ட
அரசியல்வாதிகள் கூட்டம்!

டில்லியில் போராடிய விவசாயிகள் கூட்டம்!
கோடையில் கொளுத்திய வெயில்!
வாடையில் வாட்டிய குளிர்!

ஒரேநாள் மழையில் மூழ்கிய சென்னை!
ஒரே நிமிடத்தில் ஊரையை அழித்த பூகம்பம்!
அதிபர்கள் மாற்றம்! அரசியல் தேக்கம்!
புதுப்பிரவேசங்கள்! பழையன கழிதல்கள்!
வினாவாகிப்போன   பாலியல் வன்கொடுமைகள்!
விடை தேட முடியா விவசாயப்பிரச்சனைகள்!
மணல்கொள்ளையில் காணாமல் போன ஆறுகள்!
மலையேறிய விலைவாசி!

தினம் தினம் உயரும் பெட்ரோல்!
திடீரென்று முளைத்த ஜி.எஸ்.டி!
விண்ணில் ராக்கெட் ஏவி சாதனையில் இஸ்ரோ!
வேக விரைவு ரயில் விட்ட டெல்லி மெட்ரோ!

நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள்!
பலருக்கு அது நிகழ்வு!
சிலருக்கு அது நினைவு!
ஆண்டுகள் தோறும் சேரும் பெட்டகம்!
அது நினைவுப்பெட்டகம்!
நினைவுப்பெட்டகத்தில்
2017-ன் நினைவுகள் புது வரவு.

Comments

  1. நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நல்ல கவிதை! வாழ்த்துகள் சுரேஷ்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!