பஞ்ச்”சர் பாபு- பகுதி 3

தி- இந்து தமிழ் நாளிதழின் பஞ்ச்சோந்தி பராக் பகுதிக்கு தொடர்ந்து பஞ்ச்கள் அனுப்பி வருகிறேன். சில பிரசுரம் ஆகியிருக்கிறது. பல திரும்பி எனக்கே பஞ்ச்சாக வந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் விடாமுயற்சியோடு களத்தில் குதித்துள்ளேன். அக்டோபர் 12 முதல்  அக்டோபர் 20 வரை அனுப்பிய சில பஞ்ச்கள் உங்களின் பார்வைக்கு!

1.செய்தி: 

டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டுமென்றால் ஈபிஎஸ் தலைமையிலான டெங்கு ஆட்சி ஒழிய வேண்டும்: ஸ்டாலின்


பஞ்ச்: அ’டெங்க”  மாட்றீங்களே அண்ணே!

2. செய்தி: 

பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு


பஞ்ச்: உங்களுக்கும் ஈ.பி.எஸ்ஸுக்குமான உரசியல் குறித்தாவது பேசினீங்களா அண்ணே!

செய்தி: 
'காந்தி ஒன்றும் கடவுள் கிடையாது': மாணவர்களுக்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவுரை! 

பஞ்ச்: ’காந்தி’ போன பேச்சா இருக்குதே ஐயா!

பஞ்ச்: ஆனா காந்தி படம் போட்ட ரூபா நோட்டெல்லாம் கடவுள்னும் சொல்லிக்கொடுங்க!

4.செய்தி: வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது.. அமைச்சர் செல்லூர் ராஜு அடடே ஐடியா

பஞ்ச்: 49 வது வட்டம் சார்பாக அண்ணணுக்கு “தமிழ் நாட்டு எடிசன்” பட்டம் வழங்குகிறோம்!

5.செய்தி: டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ.1 கோடி அபராதம் வசூல் - விஜயபாஸ்கர்

பஞ்ச்: திருடனை வெளியே விட்டுட்டு ஜெயிலை நல்லா இழுத்து பூட்டறீங்களே அமைச்சர் ஐயா!

6.செய்தி: மெட்ரோ ரயில் சுரங்க வழித்தடத்தால் குடியிருப்புப் பகுதியில் வீடுகளில் விரிசல்

பஞ்ச்: வீடுகளுக்கே நேரா கொண்டு இறக்கி விடுவாங்களோ என்னவோ?

7.செய்தி: 
உணவுப் பொருள்களை அதிக விலைக்கு விற்கக்கூடாது: திரையரங்குகளுக்கு விஷால் எச்சரிக்கை!

பஞ்ச்: முதல்ல ஹீரோவுங்க சம்பளத்தை அதிகமாக்கிறதை நிறுத்துங்க! அப்புறம் நாங்க நிறுத்தறோம்னு! சொல்லிடப்போறாங்க

8.செய்தி: 
ஆளுநர் மாளிகையே மக்களின் கடைசி புகலிடமாக உள்ளது: கிரண்பேடி

பஞ்ச்: என்ன பண்ணுவாங்க! நீங்கதான் “தனி ராஜ்யமே” நடத்தறீங்களே!

9.செய்தி: 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது: விஜயகாந்த்

பஞ்ச்: நீங்க போட்டியிடாதது கட்சிகளுக்கு பெரிய இழப்பு இல்லை! போட்டியிட்டா உங்களுக்கு பெரிய இழப்பு!

பஞ்ச்:  கேப்டன்! இன்னும் நங்கூரத்தையே கிளப்பலை! சுக்கானை போட ஆரம்பிச்சிட்டீங்களே!

10. செய்தி:  மது குடிப்பவர்களை குறைக்கவே மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

பஞ்ச்: எல்லா அமைச்சர்களும் 23ம் புலிகேசிகிட்ட ட்ரெயினிங் எடுத்துட்டு வந்திருப்பீங்களோ?

11. செய்தி: ராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராவார்: சோனியா காந்தி

பஞ்ச்: அப்ப கூடிய சீக்கிரம் காங்கிரஸை அழிச்சிடறதுன்னு முடிவெடுத்திட்டீங்க போலிருக்கே!

பஞ்ச்:  காந்தியோட கனவு நினைவாகப்போகுதுன்னு சொல்லுங்க!

12செய்தி: 

ஜெயலலிதா கைரேகை விவகாரம்: மதுசூதனன் உறுதியின் பேரில் ஏற்றுக்கொண்டோம்- தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்

பஞ்ச்: மது( சூது)னன்! பேச்சை நம்பலாமா?

13செய்தி: தேர்தலுக்கு திமுக தயார்!   -ஸ்டாலின்.

பஞ்ச்:  ஆனா “தேர்ந்தெடுக்கத்தான்” மக்கள் தயாரா இல்லையே தலைவரே!

பஞ்ச்:  அப்படியே “தேறுதலுக்கும்” தயாரா இருப்போம் தலைவரே!

14 செய்தி: இந்தியாவில் கோயில் கோயிலாக சென்று பிச்சை எடுத்து வாழப்போகிறேன்: ரஷ்ய இளைஞர் பிடிவாதம்

பஞ்ச்: இதைத் தான் “சகவாச தோஷம்”னு சொல்றாங்களோ!

பஞ்ச்: வேலை செய்யறவங்களை விட பிச்சைக்காரர்களுக்கு வருமுடி அதிகம்னு நிருபிச்சிட்டார் போல!


15.செய்தி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் சந்திப்பு

பஞ்ச்: ஆளப்போறதுக்கு முந்தி “அடங்கிப் போறாரோ?”

16.செய்தி: தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வாய்ப்புள்ள இடங்களில் அணைகள் கட்டப்படும்: பொன். ராதாகிருஷ்ணன்

பஞ்ச்: அப்ப இது உங்க “ கனவு” திட்டம்னு சொல்லுங்க!

17. செய்தி: எடப்பாடி பழனிசாமி அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் கவிழும்: டிடிவி தினகரன்

பஞ்ச்: ஆடி போய் ஆவணி வந்தா நல்ல சேதி வரும்னு கீரணுர் ஜோஸ்யர் சொன்ன கதையால்ல இருக்கு!

18செய்தி: டெங்குவை சவாலாக எடுத்து கட்டுப்படுத்த நடவடிக்கை!  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

  பஞ்ச்:  ஆட்சி அமைச்சதுலே இருந்து நீங்களும் நிறைய சவால்களை சமாளிச்சிட்டுகிட்டான் வர்றீங்க! 

பஞ்ச்: சவாலே சமாளின்னு ஆகிப்போச்சு உங்க வாழ்க்கை!

19 செய்தி: 

கொசுவை வைத்து அரசியல் செய்வது அவசியமற்றது: புதுக்கோட்டை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எதிர்க்கட்சிகள் மீது முதல்வர் குற்றச்சாட்டு


பஞ்ச்:  “பசுவை” வைச்சு அரசியல் செய்யலாம்! “சிசு”வை வைச்சு அரசியல் செய்யலாம்! ஆனா “கொசு” வை வைச்சி செய்ய கூடாதா?

20.செய்தி: முனைப்பான எதிர்ப்பை காட்டாமல் முனை மழுங்கிய கத்தியாக தமிழக அரசு உள்ளது: மு.க.ஸ்டாலின்


பஞ்ச்: “கூர்” தீட்டி சானைப் பிடித்துவிட பொறுப்பான எதிர்கட்சிங்க இல்லேன்னு மக்கள் பேசிக்கிறாங்களே!

21 செய்தி: அதிமுக கட்சியும் ஆட்சியும் நல்ல முறையில் வழிநடத்தப்படுகிறது – ஜெயக்குமார்

பஞ்ச்: கருப்பு- வெள்ளையை அழிச்சிட்டு காவி வர்ணம் பூசியா?

22. செய்தி: 

திமுக ஆட்சியில் சிக்குன் குனியாவுக்கு நிலவேம்பு கொடுத்தபோது கமல்ஹாசன் எங்கே போயிருந்தார்?- அமைச்சர் ஜெயக்குமார்


பஞ்ச்:  அப்ப “சினிமாவுல மட்டும்” நடிச்சிகிட்டு இருந்தாரு!

23 செய்தி: 3 தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதித்த தடை தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்

பஞ்ச்: ராஜேந்திர”பா”லாக்”ஜி!

24. செய்தி: அரசு போக்குவரத்து கழக கட்டிடங்கள் ஆய்வு செய்யப்படும்: MR விஜயபாஸ்கர்

பஞ்ச்: “போக்கு” ஆன பின்னாடியா?

25. செய்தி: 

விஜய்யின், மோடி வெறுப்பே மெர்சல்: எச். ராஜா குற்றச்சாட்டு


பஞ்ச்:: மோடி வெறுப்பா இல்லே “வறுப்பா” நல்லா சொல்லுங்க!

26. செய்தி: 

யுடர்ன் அடிக்க இது ரீடேக் அல்ல: கமலுக்கு தமிழிசை பதில்


பஞ்ச்: : அவர் ரீ டேக் எடுக்கலை ரீமேக் பண்ண முயற்சி பண்ணிக்கிட்டிருக்கார் மேடம்!

27. செய்தி: ஊழலை எதிர்த்து பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது - தமிழிசை சௌந்திரராஜன்

பஞ்ச்: அதனாலதான் மல்லையாவும் அமித்ஷாவும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க போலிருக்கு!

பஞ்ச்: அதாவது எதிர்கட்சிகளின் ஊழலைன்னு சொல்லுங்க!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்! மிக்க நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!