கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 86

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 86



1.   உன் புருஷன் உன்னை ராணி மாதிரி வைச்சிருக்கான்னு சொல்றே அப்புறம் ஏன் வருத்தப்படறே?
இளையராணின்னு ஒருத்தியை செட்டப் பண்ணி வச்சி இருக்காரே!

2.   எதுக்குப்பா இவ்வளவு சில்லறையை ஆபிஸுக்கு மூட்டைக் கட்டி எடுத்துட்டு வந்திருக்கே?
உங்க கிட்டே நிறைய “சேஞ்சை” எதிர்பார்க்கிறேன்னு நீங்கதானே சார் சொன்னீங்க?

3.   உன் மலையேறப் போயிருக்கார்னு சொல்றியே! நேத்துதான் மலையிலிருந்து திரும்பி வந்ததா சொன்னியே?
அவர் டாஸ்மாக் போயிருக்கிறதைதான் அப்படி சொன்னேன்.


4.   அதோ போறாரே அவர் நிறைய கேடிகளை தன் கீழே வேலைக்கு வைச்சிக்கிட்டிருக்கார்!
அப்ப பல “கேடிகளுக்கு” அதிபதின்னு சொல்லுங்க!

5.   திருடன் கூட  உன்னை “செல்லாக் காசு”ன்னு திட்டிட்டு போறானா ஏன்?
பர்ஸ் பாக்கெட்டில ஒரே ஒரு ஐந்நூறு ரூபா தாள் மட்டும் வைச்சிருந்தேன்.


6.   தலைவர் அண்டர்கிரவுண்ட்ல நிறைய பணத்தை பதுக்கி வைச்சிருந்தாராம்
அப்ப அவரோட நிலைமை அதலபாதாளத்துல இருக்குன்னு சொல்லு!

7.   பிக்பாக்கெட் பீட்டர் எஸ்.ஐ கிட்டே வந்து பணிவா எதோ கேட்டுக்கிட்டு இருக்கானே என்னது?
ஆயிரம் ஐநூறு ரூபா நோட்டுகளை தடை பண்ணதால பிக்பாக்கெட் அடிக்க முடியலையாம்! செலவுக்கு ஏதாவது நூறு ரூபா நோட்டு இருந்தா கொடுங்க அப்புறம் மாமூலோட சேர்த்து திருப்பி தரேன்னு கேட்டுக்கிட்டு இருக்கான்.

8.   இன்ஸ்பெக்டர் ஏன் கோபமா இருக்கார்?
ஆயிரம் ஐந்நூறு ரூபா நோட்டுக்களை தடை பண்ணதாலே அவரோட  “மாமூல் வாழ்க்கை” ரொம்பவும் பாதிச்சிருச்சாம்!

9.   புலவரே என்னை புகழ்ந்து பாட உங்களுக்கு வருடங்கள் ஆகுமா? ஏன்?
”தேடி” எடுக்க வேண்டுமே மன்னா!

10. போர்க்களத்தில் இருந்து மன்னர் பாதியில் திரும்பி விட்டாராமே!
எதிரியிடம் இருந்து தப்பிக்க “ஹாப் சான்ஸ்” தான் இருக்கிறது என்றுசொல்லிவிட்டார்களாம்!

11. போட்டிக்கு நடுவரா இருக்கிறவர் இதுக்கு முன்னாடி போட்டோ கிராபரா இருந்திருப்பார் போலிருக்கு!
எப்படி சொல்றே?
தோத்தவங்க கிட்ட  “பெட்டர் லுக் நெக்ஸ்ட் டைம்”னு சொல்றாரே!

12. மாலை போட்டுக்கிட்டு இருக்கிறவரைக்கும் என் புருஷன் பக்தி மானா இருப்பார் வீட்டை விட்டு போகமாட்டார்!
மாலையை கழட்டிட்டார்னா?
போக்கிமானா மாறிடுவார்! தேடிக் கண்டுபிடிக்கவேண்டி  இருக்கும்.

13. மகளீர் அணித் தலைவிக்கு தலைவர் இடம் வாங்கி கொடுத்தது தலைவரோட சம்சாரத்துக்கு தெரிஞ்சு போச்சு!
அப்புறம்?
தலைவர் உடம்புலே நிறைய வாங்கிக்கட்டிக்க வேண்டியதா போயிருச்சு!

14. என் லவ்வர் நான் கேட்டதெல்லாம் வாங்கித் தருவார்!
நான் கேட்காமலேயே எனக்கு” நாண்” வாங்கி தந்தாரே!

15.  எங்கப்பா சுத்த மோசம்டி!
  என்னடி சொல்றே?
நான் லவ் பண்ண பையனையே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரே!


16.  என்ன சொல்கிறீர்கள் அரசர் போருக்குத் தயார் ஆகி வருகிறாரா?
ஆமாம்! வார் அறுந்த செருப்புக்களை எல்லாம் தைக்கச்சொல்லி இருக்கிறாரே!

17. நம் மன்னர் சரியான முட்டாளாய் இருக்கிறார்?
  எப்படி சொல்கிறாய்?
நாட்டில் நிறைய சதிவேலைகள் நடக்கிறது மன்னா என்று சொன்னால் அப்படியாவது வேலையில்லா திண்டாட்டம் ஒழியட்டும் என்கிறாரே!

18. அரண்மனை விதுஷகர் மேல் மன்னருக்கு என்ன கோபம்?
மன்னரை கிண்டலடித்து எதிரி போட்ட மீம்ஸுக்கு லைக் போட்டாராம்!

19.  சினிமாவுலே ரெண்டாவது இன்னிங்ஸுக்கு அந்த நடிகை தயார் ஆயிட்டாங்களாம்!
  தாயார் வேஷத்துக்கு ரெடி ஆயிட்டாங்கன்னு சொல்லு!

20. எதிரி கோட்டையை முற்றுகை இட ஆரம்பித்துவிட்டான் மன்னா?
ஓடி ஒளிய சுற்றுக்கையில் ஏதாவது இடம் இருக்கிறதா தளபதியாரே!

21.  வர வர எப்படி ப்ளக்ஸ் பேனர் வைக்கணுங்கிறதுக்கு விவஸ்தை இல்லாம போயிருச்சு!
  என்ன ஆச்சு தலைவரே!
இந்தியாவின் இரண்டாயிரம் ரூபாய் புது நோட்டேன்னு ப்ளக்ஸ் வைச்சிருக்கானுங்களே!

22. கபாலியும் இன்ஸ்பெக்டரும் ரொம்ப அன்னியோன்னியம்னு எப்படி சொல்றே?

இன்ஸ்பெக்டர் கபாலியோட சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கிட்டு இருக்காரே!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இரசித்தோம் சிரித்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் களம் இது...
    வழக்கம் போல கலக்கல்

    ReplyDelete
  3. சிறந்த நகைச்சுவைப் பதிவுகள்

    ReplyDelete
  4. ஹா... ஹா... அனைத்தும் அசத்தல்...

    ReplyDelete
  5. ஹாஹாஹா நிறையவே ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  6. ரசித்துச் சிரித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!