நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 24

நொடிக்கதைகள்! பகுதி 24


1.   கதை!
  பல வெற்றிப் படங்களுக்கு கதை எழுதி பாராட்டு பெற்ற கதாசிரியர் வீட்டுக்குள் நுழைந்ததும் குழந்தை கோபித்துக் கொண்டது! “ நீ பேட் அப்பா! ஒரு நல்ல கதை கூட சொல்லத் தெரியலை! அம்மாதான் சூப்பரா கதை சொல்லுவா!”

2.   ஏரி!
   “தாத்தா! ஏரின்னா என்ன? அது கிராமத்துக்கு வெளியே இருக்குமா? என்று கேட்ட பேரனிடம், ஏரின்னா நிறைய தண்ணி இருக்கிற குளம்! கிராமத்துக்கு வெளியே இருக்கும் நகரத்துல அதுக்குள்ளதான் நீங்க வீடு கட்டிக்கிட்டு இருக்கீங்க!” என்றார் தாத்தா

3.   அழுக்கு!
   “சட்டை காலர்ல இருக்கு அழுக்கு போயிருக்கா பார்! எவ்வளவு மோசமா துவைச்சு இருக்கே! மனைவியிடம் எரிந்து விழுந்து கடைக்கு சென்றான். “என்னாய்யா! வாட்டர் சர்வீஸ் பண்றீங்க! மட்கார்ட் கீழே அப்படி அழுக்கு இருக்கு? என்று கஸ்டமர் அங்கே கத்திக் கொண்டிருந்தார்.

4.   லஞ்சம்!
   சரக்கடித்துவிட்டு பேண்ட் பாக்கெட்டில் சரக்கோடு வந்தவர்களை தடுத்து நிறுத்தியது போலீஸ். ”பாக்கெட்டில் வச்சிருக்கிறதை கொடுத்துட்டு போ!” என்று பிடுங்கிகொண்டு விட்டது.

5.   கண்டிப்பு!

  “ என்னா சார் பையனை வளர்க்கிறீங்க? சதா போனை நோண்டிகிட்டு திரியறான் கண்டிச்சு வையுங்க!” என்று ஆசிரியர் கம்ப்ளைண்ட் செய்கையில் வாட்சப் பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா.

6.   க்யூ!
  ரேசன் கடையில் நிறைய க்யு நிற்கிறது! நான் போய் நிற்க மாட்டேன்! எனக்கு அர்ஜெண்டா வேற வேலை இருக்கு என்று மறுத்து சென்றவன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 20-20 டிக்கெட் வாங்க க்யூவில் நின்று கொண்டிருந்தான்.

7.   உபதேசம்!
   பாரின்ல எல்லாம் நம்ம நாட்டு பொருட்களைத்தான் யூஸ் பண்றாங்க! மஞ்சளை ஆண்டிபயாடிக்கா யூஸ் பண்றாங்க! வேப்பம்குச்சியிலே பல் துலக்கறாங்க! நாமதான் நம்ம பொருட்களை மதிக்கிறது இல்லே என்று சொன்னவன் அணிந்து கொண்டிருந்தான் வெளிநாட்டு ஜீன்ஸ் பேண்டை.

8.   வளர்த்த கடா!

   தான் தூக்கிவிட்ட நடிகர் தனக்கு படம் செய்யவில்லை என்றதும் வளர்த்தகடா மாரில் பாயுது! என்றார் தன் முதல் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் இயக்க மறுத்த இயக்குனர்.

9.   கண்காணிப்பு!
  கடை முழுக்க சிசிடீவி கேமரா இருக்கு! என்ன தப்பு நடந்தாலும் கண்டுபிடிச்சிருவேன்! ஒழுங்கா  வேலை செய்யனும் ஆமா! என்று சொன்ன முதலாளியின் வீட்டில் புகுந்து கொண்டிருந்தான் கள்ளக் காதலன்.


10. துட்டு!
  “ அந்த தொகுதி மக்கள் கொடுத்து வைச்சவங்க! ரெண்டாவதா பணம் வாங்க போறாங்க! நமக்கு கொடுப்பினை இல்லை!” என்று இடைத்தேர்தல் நடக்காத தொகுதி மக்கள் புலம்பிக் கொண்டனர்.

11. அடைசல்!
பழைய புக், கேசட்னு வீட்டுல எதுக்கு இத்தனை அடைசல்! எல்லாத்தையும் தூக்கி போட்டு கொளுத்துங்க! இப்ப எல்லாம் மாறிக்கிட்டு இருக்கு” என்றவன் செல்போனில் ஒலித்தது பழைய பாடல்!

12. சுற்று!

  ஆள் மாற்றி ஆள்! குருப் மாற்றி குருப் சுற்றிவிட்டு அனுப்பியவனிடமே மீண்டும் வந்து சேர்ந்தது அந்த வாட்சப் மெசேஜ்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அனைத்துமே இரசித்தேன் நண்பரே தொடரட்டும் நொடிக்கதைகள்.

    ReplyDelete
  2. அனைத்தும் ரசித்தேன் நண்பரே!

    ReplyDelete
  3. அத்தனையையும் ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!