நம்பினால் நடக்கும்!

நம்பினால் நடக்கும்!

மாவீரன் அலேக்சாண்டர் உலகத்தை வென்று வரப்புறப்பட்ட போது தம் சொத்துக்களையெல்லாம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். அப்போது ஒருவர், எல்லாவற்றையும் கொடுத்துவிட்டீர்களே உங்களுக்கு என்னதான் மிஞ்சபோகிறது? என்று கேட்டார்.

   அலேக்சாண்டர் ஒரே சொல்லில் பதில் சொன்னார். ‘நம்பிக்கை’

ஆம் அவர் தன்னை நம்பினார்! வென்று காட்டினார். நம்பினால் எதுவும் நடக்கும்.ஆகவே எந்த ஒரு செயலிலும் எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். எதிலும் நம்பிக்கையோடு செயல்படுங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை எனும் போது அதனை இழந்தால் வாழ்க்கையையும் இழப்பது போலத்தானே?

     யானைக்கு பலம் தும்பிக்கையால் என்றால் மனிதனுக்கு பலம் அவனது நம்பிக்கையால்! நம்பிக்கை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று பிறரை நம்புவது! மற்றொன்று தன்னை நம்புவது! பிறரை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைத்தபின் அவர்மீது நம்பிக்கை இல்லாமல் அந்த காரியம் நடக்குமோ நடக்காதோ என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள் சிலர். ஒரு காரியத்தை இவர் செய்வார் என்று நம்பிக் கொடுத்தபின் அது நடக்குமோ நடக்காதோ என்று எண்ணம் வரும் எனில் அங்கு நம்பிக்கை பொய்த்து போகிறது. கடவுளிடம் நம்பிக்கை வைப்பவர்களும் இந்த வகையை சேர்ந்தவர்களே!

    கடவுளே எனக்கு இதைக் கொடு அதைக் கொடு என்று வேண்டிக் கொள்வது! இதை கொடுத்தால் இதை செய்கிறேன் என்று வேண்டிக் கொள்வது அப்புறம் அந்த காரியம் நடக்குமா? இதைக் கொடு என்று மனமுருகி வேண்டினால் இறைவன் கனிய மாட்டாரா? வரம் தர மாட்டாரா? இதைக் கொடுத்தால் இதை தருகிறேன் என்று அவர் உங்களிடம் பேரம் பேசினாரா? எதுவும் இல்லையே?

    யார் யாருக்கு என்ன தர வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வார். அவர் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதை விடுத்து இதை எனக்கு செய்தால் உனக்கு கோயில் கட்டுகிறேன் என்று லஞ்சம் கொடுப்பது போல் பேசி நம்பிக்கை இழக்கிறோம். இதில் எங்கு நம்பிக்கை வருகிறது என்கிறீர்களா? இது எனக்கு கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் கேட்கலாம் அது நம்பிக்கை இறைவன் கொடுப்பான். ஆனால் இதைக் கொடுத்தாயேயானால் இதைச் செய்வேன் எனும் போது, கொடுக்கலாம்அல்லது கொடுக்காமல் போகலாம் அல்லவா? இங்கு இரண்டு முடிவுகள் எடுக்கப்படுகிறது கொடுத்தால் என்ற சந்தேகம் எழும் போது நம்பிக்கை பொய்த்து போகிறது.

    யாராவது ஒருவரை ஒரு காரியத்திற்கு பயன்படுத்தும் முன் அவரை முழுமையாக நம்ப வேண்டும். அப்படிப்பட்ட தகுதியானவரை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் அப்புறம் அந்த காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைத்தபின் முழுமையாக அவரை நம்ப வேண்டும்.அப்புறம் சந்தேகப்படுதல்  கூடாது. இது பிறரை நம்புதலின் முதல் அடிப்படை.
   இன்னொன்று தன்னை நம்புதல். தன்னை நம்புதல் என்றதும் எதற்கெடுத்தாலும் எல்லாமும் தன்னால் முடியும் என்று கூறுதல் கிடையாது. இது ஓவர் கான்பிடென்ஸ். அதீத நம்பிக்கை. நம்பிக்கை இருக்கலாம். இந்த மாதிரி அதீத நம்பிக்கைகள் கூடாது. தன்னம்பிக்கை உள்ளவன் கட்டாயம் ஜெயிப்பான்.

நாம் வாழ்க்கைப்பாதையில் முன்னேற தன்னம்பிக்கை மிகவும் அவசியம். தன்னம்பிக்கை இருப்பின் எவ்வளவு பெரிய இடர் வரினும் தடை வரினும் அதை வெகு விரைவில் தகர்த்து எறிந்து விடலாம்.

    நம்பிக்கை இழப்பவனுக்கு வாழ்க்கையே சூனியமாக தோன்றும் நம்பிக்கை உள்ளவனுக்கோ வாழ்க்கை பிரகாசமாக தோன்றும். நம்மால் முடியும் என்று எண்ணி ஒரு காரியத்தை தொடங்குங்கள். தடைகள் வந்தாலும் தயங்காதீர்கள் முனைப்போடு செயல்படுங்கள் உங்கள் செயல் கட்டாயம் வெற்றி பெரும்.

   தன்னைத்தானே நம்பாமல் செய்யும் செயல் வெற்றி பெறாது. தன்னம்பிக்கை தான் வாழ்க்கையின் ஆதாரம். இரு நண்பர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். மாலை வீடு திரும்பும் சமயம் நாளை பார்ப்போம் என்று கூறி திரும்புகின்றனர். எந்த ஆதாரத்தில் இதை கூறி பிரிகிறார்கள். அடுத்த நொடி என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியுமா? தெரியாது ஆனால் ஒரு நம்பிக்கையில் இதை கூறுகிறோம் அதே நம்பிக்கை உங்கள் செயல்களிலும் இருக்குமானால் கட்டாயம் வெற்றி நிச்சயம்.

   முன்னேற்றம் என்பது மலர்ப்பாதையல்ல! கற்களும் முட்களும் நிறைந்த கரடு முரடான பாதை அதை கடக்க நம்பிக்கையோடு சேர்ந்த முயற்சி அவசியம். துணிவு இதுதான் நம்பிக்கையின் வாசல்! அதுநம்மை உயர்த்தும் அச்சம் என்ற சறுக்குமரம் நம்மை சறுக்கிவிடும். முன்னேற்றத்தின் முதல் எதிரி சோம்பல் தனம். தன்னம்பிக்கை உள்ளவன் சோம்பல் கொள்ளமாட்டான். பணிவு முன்னேற்றத்தின் அடுத்த கட்டம்.முன்னேற துடிப்பவனுக்கு பணிவு கட்டாயம் தேவை. தன்னம்பிக்கை உள்ளவன் இதை அறிவான்.

   தோல்விகள் வரும்போது கலங்காதீர்! தோல்விகள் உங்கள் முன்னேற்றத்தை தடுப்பவை அல்ல. அந்த தோல்விகளை வெற்றிகளாக மாற்ற முயற்சி செய்யுங்கள். முன்னேறியவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் தோல்விகளை சந்தித்தவர்களே! எல்லோருக்கும்வெற்றி எளிதில் சிக்காது! வெற்றி கிடைக்கும் என்ற தனியாத தன்னம்பிக்கை இருப்பின் கைவசமாகும் வெற்றி. பல அரிய கண்டுபிடிப்புகளின் தந்தையான எடிசன் முதலில் தோல்விகளைத் தான் சந்தித்தார். இறுதியில் வெற்றி நாயகனாக வலம் வந்தார். தோற்றபோது தன்னம்பிக்கை இழந்திருந்தால் இத்தனை பொருட்களை அவர்கண்டுபிடித்திருக்க முடியுமா?புகழ் பெற்று இருக்கமுடியுமா?

  எட்மண்ட் ஹிலாரி முதலில் எவரெஸ்ட் ஏறும் போது தோல்வியையே சந்தித்தார். சகபயணியையும் இழந்தார். ஆனால் தன்னம்பிக்கை இழக்க வில்லை அடுத்த முயற்சியில் எவரெஸ்டை எட்டி சாதனை படைத்தார்.


    சவுரவ் கங்குலி! இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். இவர் முதலில் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஒருபோட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கி வெளியேற்றி விட்டனர். பின்னர் தன் திறமை மீது நம்பிக்கை வைத்த அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அணியில் இடம் பிடித்ததோடு தலைவனாகவும் ஜொலித்தார்.

அதெல்லாம் இருக்கட்டும் இப்போது ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இந்தியாவை பதக்க பட்டியலில் கொண்டு வந்தாரே ஷாக்‌ஷி மாலிக். அவர் மல்யுத்தம் பயில செல்கையில் எத்தனை தடைகள். பெண்ணான இவர் எப்படி மல்யுத்தம் செய்யலாம்? ஆண்களுடன் எப்படி பழகலாம்? என்று எத்தனையோ தடைகள். இதையெல்லாம் கடந்து சாதிக்க முடியும் என்று நம்பியதால்தானே அவரால் ஒலிம்பிக் வரை செல்ல முடிந்தது. அதிலும் பின் தங்கி இருந்தார். இறுதியில் அவரது நம்பிக்கை பதக்கம் வெல்ல வேண்டும் என்ற உணர்வு  பதக்கத்தை பெற்றுத் தந்தது.

   இப்படி பலரை சொல்லிக் கொண்டு செல்லலாம்! தோல்விகள் நம்மிடையே அவநம்பிக்கை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அதற்கு தன்னம்பிக்கை அவசியம். தன்னம்பிக்கை உன்னை தட்டிக் கொடுக்கும்.
   உன்மீது நம்பிக்கை வை!  அது உன்னை உயரத்தில் வைக்கும்!

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கமளியுங்கள் நன்றி!

Comments

  1. நம்பிக்கையில் நம்பிக்கை வைப்போம். சாதிப்போம்.

    ReplyDelete
  2. நம்பிக்கை... அது தானே எல்லாம்!

    ReplyDelete
  3. நம்பிக்கையூட்டும் உற்சாகம் தரும் பதிவு.

    ReplyDelete
  4. நம்பிக்கை பற்றி அருமையான பதிவு நண்பரே
    நன்றி

    ReplyDelete
  5. நம்பிக்கை ஊட்டும் பதிவு.

    ReplyDelete
  6. நம்பிக்கை தான் ஊக்க மருந்து
    தொடருங்கள்
    தொடருவோம்

    ReplyDelete
  7. நம்பிக்கை குறித்த நம்பிக்கையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!