சுதந்திர தினவிழா!

சுதந்திர தினவிழா!


விடியகாலை ஆறுமணிக்கே குறைத்தூக்கத்தில்எழுப்பி
 விடுவிடுன்னு விரைஞ்சு குளிப்பாட்டி
சீருடையை சிறப்பா மாட்டி
பசிக்காத போதும் படபடவென
நாலு இட்லி ஊட்டி
ஏழு பதினைஞ்சு பஸ்ஸுல ஏத்திவிட்டு
ஓய்ந்தாங்க எங்க அம்மா!
உடன்படிக்கிற புள்ளைகளோட
பள்ளிக்குள்ளே நுழைஞ்சது பஸ்ஸு!
எட்டுமணிக்கு வரிசை கட்டி நின்னு
ஒத்திகை எல்லாம் பார்த்து
எதிர் வெயில் முகத்தில்விழ
பாதித் தூக்கம் மீதிவர

முதுகில்விழும் அடிக்கு பயந்து
சரிந்துவிழாமல் தூங்குகையில்
முக்கிய பிரமுகர் முகம் பளபளக்க
முன்னாடி வந்து ஏத்துனாரு கொடி!
எல்லோரும் கொடிவணக்கம் சொல்லி
தேசியகீதம் பாடியும் கிடைக்கவில்லை
சுதந்திரம்

அவசரமாய் வந்த ஒண்ணுக்கை அடக்கி வைத்து
அடுத்தடுத்து மேடையேறியவர்கள் சொன்ன
அறிவுரைகளை கேட்டுவைத்து
அதற்கப்புறம் தந்தார்கள் சாக்லேட்டு!
எட்டணாதான் அதன் விலை! எட்டவே இல்லை
அவர்களுக்கு பிள்ளைகளின் நிலை!
கலைநிகழ்ச்சி என்றார்கள்! பரிசளிப்பு என்றார்கள்
கடைசிவரை அணிவகுப்பில் காத்திருந்தோம்!
உடை கலங்காமல் நடை தப்பாமல்
நடுவெயிலில் நின்றிருந்தோம்!

சுதந்திர தினம் சுதந்திர தினம் என்றே
எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கையில்
சிறைபட்ட எங்களுக்கு சிரிக்கவும்
உரிமையில்லை! சிறப்பாக விழா முடிந்து
திரும்புகையில் வீட்டுப்பாடச்சுமை
விளையாடவும் தடை போட
சோட்டா பீமும் டோரேமானும் கனவில்வர
சுதந்திரத்தை மறந்து போய் சுகமாய்
தூங்கிப் போனோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. நான் குழந்தையாக மாறி நினைப்பதை அப்படியே வரைந்தது போலுள்ளது உங்கள் பதிவு.

    ReplyDelete
  3. ஐயோ பாவம் !குழந்தைங்களை சுதந்திரமா இருக்க விடுங்கப்பா :)

    ReplyDelete
  4. யதார்த்தமாய அருமையாய்
    ஒரு சிறப்புப் பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அது என்னவோ உண்மைதான்.

    ReplyDelete
  6. சுதந்திர தின வாழ்த்துகள்

    ReplyDelete
  7. பள்ளியில் படிக்கிறச்சே கொடுத்த ஆரஞ்சு மிட்டாய்கள் நினைவில் வருது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!