கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 68

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 68


1.   தலைவர் மக்கள் மேல உரசிகிட்டே பேசிக்கிட்டு இருக்காரே ஏன்?
மக்கள் கிட்ட நெருங்கி பழகாததுதான் தோல்விக்கு காரணம்னு யாரோ சொல்லிட்டாங்களாம்!

2.   ஹேர் டிரான்ஸ்ப்ளேண்ட்டுக்கு போன நம்ம மேனேஜர் ஏன் திரும்பி வந்துட்டாராம்?
வழுக்கை இழக்க போயி வாழ்க்கையை இழந்துட கூடாதுங்கிற பயம் தான் காரணம்!

3.   ஏம்பா தரகரே! பொண்ணு “பாரு”க்கெல்லாம் போவும்னு முன்கூட்டியே சொல்ல வேண்டாம்?
நான் அப்பவே சொன்னேனே பொண்ணு “ பாரின் ரிட்டர்ன்”னு!

4.   தலைவருக்கு திடீர்னு “ தவ வாழ்க்கை” மேல இண்ட்ரஸ்ட் வந்துருச்சா  எப்படி?
2021ல் முதல்வர் ஆகணும்னு சொல்லிக்கிட்டு திரியறாரே!


5.   போரென்று புறப்பட்டு விட்டால் மன்னர் இடையில் எங்கும் நிற்கவே மாட்டார்!
அவ்வளவு ஆவேசமா?
 நீ வேற எதிரி துரத்தி பிடித்துவிடுவானோ என்ற பயம்தான் காரணம்.

6.   அவங்களை ஏன் கைது பண்ணி கூட்டிட்டு போறாங்க?
ஹேர் டிரான்ஸ்பரண்ட் பண்றேன்னு சொல்லி சைக்கிள் பம்ப் வித்துட்டு இருந்தாங்களாம்!

7.   பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப விவரமானவங்களா இருக்காங்க!
எப்படி சொல்றே?

பொண்ணு பார்த்துட்டு மெயில்ல பதில் சொல்றோம்னு சொன்னா  அவங்க அப்ப நீங்க மெயில் அனுப்பிச்சதும் அமேசான் ல பஜ்ஜி சொஜ்ஜி அனுப்பறேன்னு சொல்றாங்களே!

8.   போர் வருவதற்கு முன்னரே மன்னர் ஆயத்தம் ஆகிவிட்டாராமே!
ஆமாம்! பதுங்கு குழியெல்லாம் ஒட்டடை அடித்து வெள்ளை பூசி அங்கே குடியேறிவிட்டார்.

9.   புத்தக கண்காட்சிக்கு போய் வந்தியே? எது நல்லா விக்குது?
கரும்பு ஜூஸும் தேங்காய்பால் ஆப்பமும் தான் நல்லா சேல்ஸ் ஆகுது!


10.  தலைவர் கிட்ட பழைய குப்பைகளை கிளறாதீங்கன்னு சொன்னா கேக்கவே இல்லை!
இப்ப என்ன ஆச்சு!
எதிர் கட்சிக்காரங்க நாற அடிச்சிட்டாங்களே!

11. உன் கன்னமெல்லாம் வீங்கி போனதுக்கு “ஸ்ருதி”ய   லயிச்சதுதான் காரணமா புரியலையே!
நான் போன் ல ஸ்ருதி ஹாசன் இமேஜ் பார்த்ததை என் பொண்டாட்டி பார்த்துட்டான்னு சொல்ல வந்தேன்.

12.  உன் பொண்ணு ஒரு பையன் கிட்டரொம்பநாளா நெருக்கமா பழகிட்டு இருந்தாலே என்ன ஆச்சு?
இப்ப பொண்ணுக்கு நாள் தள்ளி போக வைச்சுட்டான்!

13. மாப்பிள்ளை கால்டாக்ஸி டிரைவர்…!
அப்ப சுத்தி வளைச்சு  நிறைய எதிர்பார்ப்பார்னு சொல்லுங்க!

14.  மாப்பிள்ளை எப்பவும் நம்மளை பத்தி தப்பாவே எடை போட்டுடறார்!
என்ன பண்றது அவர் ரேசன் கடையிலே இல்லே வேலை பார்க்கிறார்



15.  வீட்டுல வைஃப் இல்லாவிட்டாலும் பரவாயில்லை வை –ஃபை கண்டிப்பா இருக்கணும்னு ஏன் சொல்றே?
வை-ஃபை இல்லேன்னா உங்கவீட்டுக்கு வேலைக்கு வரமுடியாதுன்னு வேலைக்காரி சொல்றாளே!


16.  எந்த லிஸ்ட்லெயும் தன்னோட பேர் இல்லைன்னு தெரிஞ்சதும் தலைவர் குஷியாயிட்டார்!
   ஏன்?
நிமிர்ந்து நடக்கலாம்னுதான்!


17.  மன்னர் ஏன் புலவரை கைது செய்ய சொல்லிவிட்டார்!
”பார்” போற்றும் மன்னா! என்று மன்னர் பாருக்கு செல்வதை நக்கலடித்து பாடினாராம்!

18.  அந்த பில்டர் புதுமையா எதோ பண்றாராமே!
சென்னையிலே வீடு கட்டி குடியேறறவங்களுக்கு புதுசா ஒரு ”போட்”டும் வாங்கி தர்றாராம்!

19.  போரில் தோற்றாலும் மன்னரின் ஜம்பத்திற்கு குறைவு இல்லை!
  என்ன?
”இட் வில் பீ பேக்” அப்படின்னு சொல்றாரே!

20. தேர்தலில்  எங்கள் கூட்டணி தோற்றாலும் மீண்டு வருவோம்!
   யாரை தோற்கடிக்கிறதுக்கு தலைவா!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!





Comments

  1. கவலையை மறக்கும் மா-மருந்துகள், நன்று

    ReplyDelete
  2. கொஞ்சம் என்ன
    நல்லாவே சிரிச்சோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அனைத்தும் ரசித்தேன் நண்பரே....

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை ரசித்தேன் ... https://ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
  5. கொத்துக் கொத்தாய் ரசித்தேன், சிரித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!