தளிர் சென்ரியு கவிதைகள்!

தளிர் சென்ரியு கவிதைகள்!


புத்தகக் கண்காட்சி!
அமோகமாக விற்றுக்கொண்டிருந்தது
பஜ்ஜி!

சிரித்த முகம்!
சேரூற்றி பாய்ந்தது வாகனம்!
சாலைத்தடுப்பில் விளம்பரம்!

வெள்ளுடைக் காவலர்கள்
கையில் சிறைபட்டது
அழுக்கு நோட்டுக்கள்!


ஏறி இறங்குகையில்
மூச்சிறைத்தது பேருந்து!
மேம்பாலங்கள்!

அரங்கு நிறைந்த காட்சி
வசூல் அள்ளவில்லை!
புத்தகக் கண்காட்சி!


அறுகிப் போன மரங்கள்
உறுகி வழிந்தன
தார்சாலைகள்!

சிதைக்க முடியாமல்
சிதைபட்டது பூமி!
நெகிழிகள்!

உறிஞ்சிக்கொண்டே இருந்தார்கள்
புகுந்தது
கடல்நீர்!

நிறைய நிறைய
குறைந்து போனது சுத்தம்!
நகரம்.


நின்று விற்பவர்களால்
வென்றுகாட்டுகிறார்கள்
துணிக்கடை முதலாளிகள்!

இடம் கிடைக்கவில்லை!
சபிக்கப்பட்டது
அரசுப் பேருந்து!

நேரம் தவறி வந்தாலும்
பதறவில்லை!
மின் வண்டி!


நீரூற்றாமலே முளைத்தன
நீண்ட வீதிகளில்
பாதையோர கடைகள்!

தூய்மை தின விழா
அரசியல்வாதி வருகை!
வெடித்தன பட்டாசுகள்!

கவிழ்ந்து கிடக்கும் குடிமகன்கள்
நிமிர்ந்து நடக்கின்றது
அரசாங்கம்!


இலக்கை எட்டினாலும்
வீழ்ச்சி கண்டது நாடு!
டாஸ்மாக்.

ஏற்றிவிட்டதும்
இறங்கிப்போகிறான் சாமானியன்!
பெட்ரோல் விலை!


வாரம் ஒருமுறை
வர்ணம் மாறின சுவர்கள்!
சுவரொட்டிகள்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. //கவிழ்ந்து கிடக்கும் குடிமகன்கள்
    நிமிர்ந்து நடக்கின்றது
    அரசாங்கம்//

    மிகவும் ரசித்தேன் நண்பரே வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமை அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
  3. நச்சென்று இருந்தன கவிதைகள்.

    ReplyDelete
  4. அனைத்தும் அருமையான கவிதைகள் நண்பரே! வெகுவாய் ரசித்தேன்!
    நன்றி!

    ReplyDelete
  5. "அரங்கு நிறைந்த காட்சி
    வசூல் அள்ளவில்லை!
    புத்தகக் கண்காட்சி!" என
    அருமையாகப் பகிர்ந்தீர்கள்...

    பொத்தகக் கடைகளில் தூங்கும்
    அறிவாளிகளைத் தட்டியெழுப்ப
    வாசகர்கள் இல்லையே!
    என்று என்னையும் எழுத வைக்கும்
    தங்கள் கவிதைக்குப் பாராட்டுகள்

    ReplyDelete
  6. //ஏறி இறங்குகையில்
    மூச்சிறைத்தது பேருந்து!
    மேம்பாலங்கள்!//

    சென்ரியூ கவிதைகள்ன்னா?..

    ReplyDelete
  7. முதல் கவிதையே புன்னகைக்க வைத்தது!

    ReplyDelete
  8. அருமைக்கவிதைகள் ரசித்தேன்.

    ReplyDelete
  9. சென்ரியூன்னா என்னன்னு ஏற்கெனவே கேட்டிருந்தேன். பதில் இல்லை ஜீவி சார். :) ஆனால் அனைத்தும் அருமை! அதிலும் குடிமகன்களையும் அரசையும் குறித்த கவிதை அருமை.

    ReplyDelete
  10. ஜீவி சார், கீதா மேடம்! அழகியல் மிளிர்ந்தால் ஹைக்கூ என்றும் நகைச்சுவையும் சமூகச் சாடலும் இருந்தால் சென்ரியு என்றும் சொல்வார்கள். ஹைக்கூ, மற்றும் சென்ரியூ எழுத தமிழ்தோட்டம் என்ற தளத்தில் 2011ம் ஆண்டில் பழகினேன். கவியருவி ரமேஷ் என்ற கவிஞரின் வழிகாட்டுதலில் 400க்கும் மேற்பட்ட ஹைக்கூக்கள் அங்கு எழுதினேன். அங்கு எழுதியதை இங்கும் பதிவிட்டேன். புதிதாகவும் எழுதி வருகிறேன். இது குறித்து பலமுறை நம் தளத்தில் விளக்கியுள்ளேன். உங்கள் கண்ணில் படாமல் போயிருக்கலாம். ஹைக்கூ மற்றும் சென்ரியூவிற்கு கவியருவி ரமேஷ் அவர்களின் விளக்கம் கீழே!
    சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. )

    சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும்.

    ‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள்.

    தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழலுக்கு தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியு’ சிறந்த வடிவம் /உள்ளடக்கம் ஆகும்.

    வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. சென்ரியூ விளக்கம் இன்றே அறிந்தேன். உண்மையில் சென்ரியூ கவிதைகளை முதலில் பார்த்ததே உங்கள் தளத்தில் தான். நீங்கள் ஏற்கெனவே இதற்கு விளக்கம் கொடுத்தது தெரியாது! நேரம் எடுத்துக் கொண்டு விளக்கியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. அனைத்தும் அருமை. பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  13. வாசித்தேன். நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. பதிலுக்கு மீண்டும் வருகிறேன்.

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  14. //தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். //

    இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள அங்கீகரிக்க தமிழ் அறிஞர்கள் கூட இருக்கிறார்களா, என்ன?.. இந்த சட்டாம்பிள்ளைகள் என்ன அளவுகோல் கொண்டு இதையெல்லாம் தீர்மானிக்கிறார்கள்?.. அல்லது அப்ப்டி ஏற்றுக்கொண்ட அங்கீகரித்தவர்களின் பங்களிப்பு (contribution) தான் என்ன?

    400 க்கு மேற்பட்ட ஹைக்கூ கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்று அயராமல் சொல்லி அசர வைத்திருக்கிறீர்கள்! படைப்பவனே அவன் படைப்புக்களுக்கெல்லாம் ராஜா! படைப்புகள் யாருடைய ஏற்றுக்கொள்ளலையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்த்து உருவாவதில்லை. அதனால் சொன்னேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!