Posts

Showing posts from June, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 71

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்!  பகுதி 71 1.    கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லேன்னு தலைவர் சொல்லிட்டாராமே! கொடுத்தாலும் வாங்கிறதுக்கு அங்கே தொண்டர்கள் யாரும் இல்லையே! 2.    அந்த சாமியாரை ஏன் கைது பண்ணிட்டு போறாங்க? சூரணம் விக்கிறதா சொல்லி பல பேரோட சொத்துக்களை ஜீரணம் பண்ணிட்டாராம்! 3.    பேஸ்புக்குல நம்ம படத்தோட டீசருக்கு நிறைய வரவேற்பாமே! ஆமா! சின்ன குழந்தை கூட டீஸ் பண்ணி  கமெண்ட் பண்ணிகிட்டு இருக்கு! 4.    தன்னோட வழக்கை சைபர் கிரைம் போலீஸ் விசாரிக்க தலைவர் விரும்பலையாமே? கோடி கோடியா சொத்து இருக்கிறப்ப சைபர் போலீஸ் விசாரிக்கிறது இழுக்குன்னு நினைக்கிறாராம்! 5.     ஆனாலும் அந்த சர்வருக்கு நக்கல் அதிகம்?   எப்படி சொல்றே? சோலாப் பூரி உப்பலா இருக்க வேணாமான்னு கேட்டா நீங்க ஏற்கனவே உப்பி இருக்கீங்க! இன்னமும் உப்பணுமான்னு கேக்கறான்! 6.    எதிரி எல்லை தாண்டி விட்டான் மன்னா!   நம் கொல்லைக் கதவை திறந்தே வைத்துவிடுங்கள் அமைச்சரே! 7.    அந்த வக்கீல் டேபிள் மேல ஏன் ஸ்பேனர் செட் வைச்சிருக்காரு? அவர் கேஸை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சி மேய்ஞ்சிடுவாராம்!

சாதனைபெண் டுட்டி சந்த்! உவேசா சிலேடை! கதம்பசோறு!

Image
கதம்ப சோறு! சுவாதி கொலை!         நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் அதிகாலை வேளையில் பலர் முன்னிலையில் துடிதுடிக்க கொல்லப்பட்டிருக்கிறார் சுவாதி. ரயில்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறம் இருக்க ஒருவர் கூட இதை தடுக்கவோ கொலையாளியை விரட்டி பிடிக்கவோ முனையவில்லை என்பது தமிழ்நாட்டில் மனிதாபிமானம் செத்துப்போனதை காட்டுகிறது. இதற்கிடையில் பேஸ்புக்கில் சிலர் இறந்த பெண்ணிண் ஜாதியை காரணம் காட்டி அவர்கள் திமிர் பிடித்தவர்கள் வருந்த வேண்டாம் ஜாதி மோதலை உருவாக்கி வருகின்றனர். ஒய். ஜி மகேந்திராவும் தன் பங்கிற்கு முஸ்லிம் நபர்தான் கொலை செய்தது என்று ஒரு பெயரைச் சொல்லி பின்னர் நான் சொல்லவில்லை என்று பல்டி அடிக்கின்றார். பட்டப்பகலில் ஒரு கொலை நடந்திருக்கிறது. பலர் கூடும் இடத்தில் நடந்திருக்கிறது. மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதை பேசாமல் இப்படி ஜாதிய நோக்கோடு இந்த கொலை பேசப்படுவது ஆரோக்கியமானது இல்லை!  கெஜ்ரிவால்- மோடி மோதல்!      டெல்லியில் ஆட்சியை பிடித்தாலும் அர்விந்த் கெஜ்ரிவால் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையில்தான் இருக்கிறார். இந்திய

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 11

Image
போகாதே! ”காலம் கெட்டுக்கிடக்கு! ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டேண்ட் பக்கம் கூட்டம் இருக்கே பயமில்லைன்னு    தனியா போய்  உயிரை விட்டுறாதே  ஜாக்கிரதை! ஆமாம் சொல்லிப்புட்டேன்!” என்று காலேஜுக்கு கிளம்பிய பேத்தியை எச்சரித்தாள் பாட்டி! அட்வைஸ்!     ஜங்க் புட் நிறைய எடுத்துக்காதீங்க! அது உடம்புக்கு நல்லதில்லை! அது முழுசும் கொலஸ்ட்ரால் நிறைய இருக்கு! எப்ப செஞ்சதுன்னு தெரியுமா? குர்குரெ! லேஸ், பர்கர், பீட்ஸான்னு நிறைய சாப்பிட்டா அப்புறம் உடம்பு கெட்டுப் போகாம என்ன செய்யும்? மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவனிடம் அறிவுரை வழங்கியவன் கைகளில் இருந்தது பெரியதொரு மிக்சர் பாக்கெட். வீக் எண்ட்!    ”ஊருல தாத்தா செத்து போயிட்டாராம்!” ஞாயிறு அதிகாலையில் செய்தி வந்ததும் ”இந்த வீக் எண்டும் பாழாப் போச்சா! ஞாயிற்றுக்கிழமை பார்த்தா சாகனும்!” என்று புலம்பிக் கொண்டிருந்தான் பேரன். இனிப்பு!    சொற்பொழிவில் இனிக்க இனிக்க பேசிய சொற்பொழிவாளர் பேசி முடித்ததும் கேட்டார் “ சக்கரை இல்லாம கொஞ்சம் காபி கிடைக்குமா?” முழம்!    முல்லை கதம்பம் முழம் முப்பது ரூபா! அதுக்கு கொறைச்சு தரமு

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
      தளிர் ஹைக்கூ கவிதைகள்!     குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது     குளத்தில் இறங்கிய     நிலா!     மேகம் மூடிய வானம்!     சோபை இழந்தது     பூமி!    அழுக்கினை விரட்ட    உயிரை விட்டது    சோப்பு!    பூத்துக் கொட்டியது    பறிக்க ஆளில்லை!    நட்சத்திரங்கள்!   வெட்டுபட்டாலும்   கட்டு போட்டதும்   வரவேற்றது வாழை!  வெளிச்சத்தை நாடியதும்  மிச்சத்தை இழந்தன  பூச்சிகள்!  நாசியைத் துளைத்தது  மண்வாசம்.  தூறல் மழை! மறையும் ஒளி! மயக்கத்தில் ஆழ்ந்தது பூமி! செம்பழத்தை சிறிதுசிறிதாய் விழுங்கியது மலை மாலைச்சூரியன்! கடத்தி வருகின்றான் பிடித்தால் விட மறுக்கின்றான்! மின்சாரம்! மூட்டை சுமக்கும் தாத்தா முகத்தில் பரவுகிறது மகிழ்ச்சி! உப்பு மூட்டை!  வருத்தவில்லை சுமை  உருத்தவில்லை பாரம்  உப்புமூட்டை! உடைகின்ற பேச்சினால் சேர்த்துவைக்கிறது உறவை குழந்தைகள்! புதைந்து கிடக்கும் கற்பனை சுரங்கங்கள்! குழந்தைகள்! இருள் கவ்வுகையில் ஓலம் எழுப்பியது பூமி! சில்வண்டுகள்! மூச்சிறைக்க

இண்ட முள்ளு!

Image
இண்ட முள்ளு!  இண்ட முள்ளுவின் ஆசிரியர் அரசனின் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. தமிழ்த்தோட்டம் என்னும் வலையில் நானும் எழுதியபோது பழக்கம். பின்னர் அவரது வலைப்பூவில் அவரது மண்வாசனை கமழும் படைப்புக்களை படித்து ரசித்து வியந்திருக்கிறேன். மண்மணம் கமழும் அவரது படைப்புக்கள் அவரின் திறமையை பறைசாற்றும். அவரது முதல் நூல் இது. நூலின் தலைப்பே வித்தியாசமாக அமைந்திருப்பதை நம்மை கவர்கிறது. இண்ட முள் என்பதன் விளக்கத்தை அட்டையிலேயே தந்திருக்கிறார் எழுத்தாளர் அரசன். தான் படர்ந்திருக்கும் பரப்பினை கடக்கும் எவரையும் கொத்தாக பிடித்திழுக்கும் இயல்பினைக் கொண்டது இண்ட முள். அதே போல இண்ட முள்ளு கதையை வாசிக்கின்ற மனிதனின் மனதை கொத்தாய் பிடித்திழுக்கும் இயல்பில் படர்ந்துள்ளது என்று நம்பிக்கையோடு கூறும் அரசனின் வார்த்தைகள் பொய்க்கவில்லை .     ஒன்பது அழுத்தமான சிறுகதைகளை தொகுப்பாக்கி நமது மனசில் அந்த கதை மாந்தர்களை சுமக்க வைத்து அழுத்தமாக பதிய வைத்துள்ளார் அரசன். ஒவ்வொரு கதையும் அவர் பிறந்து வளர்ந்த உகந்த நாயகன் குடிக்காடு கிராமத்தையும் அதன் மண்ணின் மைந்தர்களையும் கண் முன்னே நிறுத்துகிறது.   

நரி ருசித்த ஆப்பம்! பாப்பா மலர்!

Image
வயலூர் என்ற கிராமத்தின் அருகே ஒரு சின்ன புதர்க் காடு இருந்துச்சு. அந்த புதர்காட்டுல குள்ள நரி ஒண்ணு வசிச்சு வந்தது. புதர்காடுன்னா பெரிய பெரிய மரங்கள் இல்லாம சின்ன சின்ன மரங்களும் செடிகொடிகளும் அடர்த்தியா வளர்ந்து இருக்கிற ஒரு காடு அது. அந்த காட்டின் எல்லையில் வயலூர் இருந்துச்சு.     வயலூர் கிராம மக்கள் அந்த காட்டுல போய் சுள்ளி பொறுக்குவாங்க. சில மூலிகைச் செடிகளை பறிச்சு சேகரம் பண்ணி வெளியே நகரத்துக்கு கொண்டுபோய் வித்து காசாக்கிப்பாங்க. சின்ன காடா இருக்கிறதனாலே பெரிய விலங்குங்க நடமாட்டம் இல்லை. அதனால ராத்திரிப் பொழுதிலே கூட பயமில்லாம காட்டுப் பக்கம் போய் வருவாங்க.     ஒரு நாள் மீனாட்சிப் பாட்டி வயலூர் கிராமத்துல இருந்து காட்டுக்கு விறகு சேகரிக்க போனாங்க. அவங்க வயலூர்ல இட்லிகடை வைச்சு பிழைச்சுகிட்டு இருந்தாங்க. அவங்க கை மணத்துக்காகவே நல்லா வியாபாரம் ஆச்சு. விலையும் குறைவு. அதனாலே கடையிலே எப்பவும் கூட்டம் அள்ளும். வழக்கமா அவங்களோட பேரன் குருபரன் தான் சுள்ளிப் பொறுக்க போவான். ஆனா அவனுக்கு திடீர்னு காய்ச்சல் வந்ததாலே அவனாலே சுள்ளி பொறுக்க போக முடியலை. அதனாலே பாட்டியே சுள்ளி பொற

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 70

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 70 1.    தலைவர் ஜெயிலுக்குள்ளே நுழைஞ்சதும் கண் கலங்கினாராமே! பழசெல்லாம் ஞாபகம் வந்துருச்சாம்! அப்ப லூங்கியோட போனவர் இப்ப வேட்டியோட போயிருக்கார் இல்லையா! 2.    இன்னைக்கு சட்டசபை கூடிச்சுன்னு எப்படி கரெக்டா சொல்றீங்க? எதிர்கட்சிக்காரங்க அரைமணிநேரத்துல வெளிநடப்பு செஞ்சு கேண்டீன் ல நிக்கறாங்களே! 3.    தலைவர் தூங்கிட்டு இருக்கும்போது சத்தம் போட்டா யாருக்கும் பிடிக்காது… அப்புறம் என்ன செய்வார்! வெளிநடப்புதான்! 4.    படம் ஒரே சொத்தையா இருக்குன்னு பேசிக்கிட்டு இருந்தியே அப்படி என்ன படம் பார்த்தே?   முத்தின கத்திரிக்காய்! 5.    மக்கள் மனசிலே இடம்பிடிக்கிறா மாதிரி எதையாவது செஞ்சு அசத்தனம்யா! முதல்ல சட்ட சபையில இடம்பிடிக்கிற வழியை பாருங்க தலைவரே! 6.    அந்த ஆஸ்பிட்டல்ல ஏன் அவ்ளோ கூட்டம்? அங்க நர்ஸுங்க பேஷண்ட்டுக்கு டிரெஸ் பண்ணி விடறதோட மேக்கப்பும் போட்டு விடறாங்களாம்! 7.    நெட்கார்டு போட்டு விடுன்னு பொண்டாட்டி சொன்னதை மறந்து வீட்டுக்கு போயிட்டேன்… அப்புறம்? வீட்டுக்குள்ளே நுழைய ரெட்கார்டு போட்டுட்டா! 8.