புகைப்பட ஹைக்கூ 82

புகைப்பட ஹைக்கூ


உடைபட்டதும்
உருக்குலைந்தது நாடு!
பூகம்பம்!

ஆடியதும்
ஆட்டம் முடிந்து போனது
பூகம்பம்!

இடிந்த கட்டிடங்கள்
ஒடித்தன நம்பிக்கை!
பூகம்பம்!

சிலநொடி கோபம்!
சிதறுண்டது நாடு!
நேபாளபூகம்பம்!

சீறியதும்
சிறகொடிந்தது நாடு!
பூகம்பம்!

பசியெடுத்த பூமி!
பலியாகின உயிர்கள்!
பூகம்பம்!

இயற்கையின் பாடம்
ஈடில்லா விலை!
பூகம்பம்!

சிலநொடிகள் குலுங்கியதும்
சிதைந்து போனது நகரம்!
பூகம்பம்!

சுமந்தவர்களை
சுவைத்துப்பார்த்தது பூமி!
பூகம்பம்!

தாங்கமுடியாத துயரம்
உருவாக்கிய தாங்கமுடியா
துயரம்!

ஆசையே துன்பத்திற்கு காரணம்!
அழிகையில் அறிவித்தது
புத்தரின் பூமி!

பாரம் இறக்கிய பூமி!
பாரமாயின நெஞ்சங்கள்!
பூகம்பம்!


வெடிபட்ட நிலம்
விழுங்கியது கட்டிடங்கள்!
பூகம்பம்!

வீடே பகையானது
வீணர்களான மக்களுக்கு!
பூகம்பம்!

அழிகையில்
பிறப்பெடுக்கிறது மனிதம்!
முரணாண உண்மை!

மலைபோல நம்பியும்
சிலையாக நின்றது!
பூகம்பம்!

இடிபாடுகள்
இரைத் தேடின!
பூகம்பம்!



நடுங்கியதும்
நடுங்கிப் போனார்கள் மக்கள்!
பூகம்பம்!

ஆட்டம் அடங்கியதும்
அடக்கம் செய்யப்பட்டது நகரம்!
பூகம்பம்!

எண்ணிலா உயிர்கள்
மண்ணிலே மறைவு
கண்ணிலா பூமி!

தாய் பூமியில்
அகதிகளான மக்கள்!
பூகம்பம்!

தாயின் கோபம்
தாங்க வில்லை பிள்ளைகள்!
பூகம்பம்!

சரித்திரத்தையும்
சரித்துப் போட்டது பூமி!
பூகம்பம்!

மண்ணுக்கு பசியெடுக்கையில்
கண்ணுக்குத் தெரிவதில்லை மனிதர்கள்!
பூகம்பம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!





Comments

  1. பூகம்பம் குறித்த ஹைகூ கவிதைகள் எல்லாமும் அருமையாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நெஞ்சு தொடும் வரிகள் ஐயா!

    தங்களைப் போன்ற பல் புலமை ஆளுமைகளைக் காண வியப்பே!

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  3. மனதை தொட்டன வார்த்தைகள் அனைத்தும் நண்பரே...

    ReplyDelete
  4. மண்ணுக்கு பசியெடுக்கையில்
    கண்ணுக்குத் தெரிவதில்லை மனிதர்கள்!
    உண்மை நண்பரே உண்மை

    ReplyDelete
  5. ஒவ்வொரு ஹைக்கூ சொன்ன அர்த்தங்களும் மனம் பதைக்க வைத்த பொருத்தமான படங்களும் உங்கள் மன உணர்வை மிக தத்ரூபமாக பிரதிபலிக்கிறது சுரேஷ்....

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    ஒவ்வொரு வரிகளும் கருத்து நிறைந்தவை... நன்றாக உள்ளது
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. மிக வேதனையான நிகழ்வினை கவிதையாக வடித்துவிட்டீர்கள். மனச்சுமையைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நாம் இயற்கையை மதிப்பதில்லை. அதன் விளைவு இயற்கை நம்மை மதிக்கவில்லை.

    ReplyDelete
  8. நிலநடுக்கத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  9. வேதனை..... இயற்கையின் சீற்றம் தாங்க முடியாதது.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!