இந்தியாவின் வெற்றியும் பாகிஸ்தானின் தோல்வியும்!

இந்தியாவின் வெற்றியும் பாகிஸ்தானின் தோல்வியும்!


          உலகக் கோப்பை  காலிறுதி போட்டியில் நான்கு ஆசிய அணிகள் தகுதி பெற்றன. அதில் மூன்று அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.  பாகிஸ்தான்  அணி மீது அதிக  நம்பிக்கை கொடுத்து அது அரை இறுதியில் இந்தியாவுடன் மோதும் என்று காலிறுதி போட்டிகள் துவங்கும் முன்னரே  ஊகங்கள் கிளம்பின. அவைகள் வெறும் கனவுகளாகிவிட்டது.

     உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் எழுச்சிமிகு ஆட்டம் வியக்க வைக்கிறது. தொடர்ந்து  ஏழு போட்டிகளில் வெற்றி என்பது மட்டும் அல்ல இதுவரை மோதிய ஏழு அணிகளின் எழுபது விக்கெட்டுக்களையும் சாய்த்து உள்ளது இந்திய பந்துவீச்சு. இதே பந்து வீச்சுதான் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரிலும் முத்தரப்புத் தொடரிலும் எடுபடாமல் போனது. ஆனால் இன்று  அதே பந்து வீச்சு பட்டையைக் கிளப்புகிறது.

    நேற்று வங்க தேசத்துடன் ஆன போட்டியில் இந்தியாவின் திட்டமிடல் நன்கு தெரிந்தது. துவக்கத்தில் நிதானமாக ஆடி விக்கெட்டை இழந்துவிடாமல் இருந்தால் கடைசியில் ரன்களை குவித்துவிடலாம். அதே போல் எதிரணி விளையாடும் போது  முதல் பத்து ஓவர்களுக்குள் சிக்கனமாக பந்து வீசி  இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திவிட வேண்டும். பின்பு சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்த்த பந்து வீச்சை சிக்கனமாக வீச வேண்டும்.

     பீல்டிங்கில் துடிப்பாகவும் வரும் கேட்ச் வாய்ப்புக்களை வீணாக்காது பிடிக்கவும் செய்ய  வேண்டும். இதைத்தான்  கடந்த ஏழு  போட்டிகளிலும் சரியாக செய்து வருகிறது இந்தியா.   அதுபோல பேட்டிங் ஒருவரை மட்டும் நம்பி இராமல் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒருவர் என்று பரவலாக்கப்பட்டு உள்ளது. தவான், கோலி, தோனி, சர்மா, ரெய்னா, ரகானே என்று அனைவருமே ஒவ்வொரு போட்டியில் ஒருவர் என சிறப்பாக பேட் செய்துவிடுகின்றனர்.

    இது பந்து வீச்சாளர்கள் மீதான சுமையினைக் கொஞ்சம் குறைத்துவிட அவர்களும் ரிலாக்ஸ்டாக  பந்து வீசுகின்றனர். நேற்றைய போட்டியிலும்  இருபத்தைந்து ஓவர் வரை பெரிதாக ரன் இல்லை. விக்கெட்டும் மூன்று விழுந்து விட்டது. அப்புறம் உள்ளே வந்த ரெய்னாவும்  நிதானமாக  பத்து ஓவர் வரை ஆடினார். பின்னர் ரன் ரேட்டை உயர்த்தி 300 ஐ எட்டினர்.

    பந்து வீச்சில் ஷாட் பால்களை நேர்த்தியாக வீசுகின்றனர். ஸ்பின்னர்களும் சிறப்பாகவே வீச எதிரணி ரன் சேர்க்க தடுமாறுகிறது. இந்திய அணியின் பீல்டிங்க் மிகவும் மாறுபட்டு துடிப்பாக காணப்படுகிறது. இதற்கு ஷிகர் தவான் நேற்று பிடித்த கேட்ச் மற்றும் தோனி பிடித்த கேட்ச்கள் சிறந்த உதாரணம்.

இப்படி  அனைத்து துறைகளிலும்  அசத்துவதால்  உலகக் கோப்பையினை  இந்திய  அணி நெருங்கி விட்டதாகவே நான் நினைக்கிறேன். 2003 பைனலில்  இப்படி நெருங்கிய அணி பதட்டத்தால் கோட்டை விட்டது. அந்த பதற்றம் இப்போதைய அணியில்  காணப்படவில்லை! எனவே ஏதாவது தவறு  செய்தால் மட்டுமே கோப்பை  கை நழுவும். நிச்சயமாக அதற்கு இப்போதைய நிலையில் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.


     அதே சமயம்   அதிர்ஷ்டத்தினால் காலிறுதியில் நுழைந்த பாகிஸ்தான்  இன்று ஆஸ்திரேலியாவிடம்  மரண அடி வாங்கியது. மிஸ்பா உல் ஹக் கை எப்படி கேப்டனாக தேர்வு செய்தார்கள் என்றே தெரியவில்லை! சுத்தமாக அவருக்கு வியூகம் வகுக்கவே தெரியவில்லை. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது வீணாக தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆனார்.  அவர் மட்டும் அல்ல  இன்னும் சிலரும்.

   குறைந்த ஸ்கோர்  அதை டிபெண்ட் பண்ணுகையில்  துவக்கத்தில் சரியான பந்து வீச்சாளர்களை பயன்படுத்தவில்லை. அப்படியும் மூன்று விக்கெட்டுக்கள் விரைவில் விழுந்தன. அப்பொழுது நன்றாக வீசிக்கொண்டிருந்த் வஹாப் ரியாஸுக்கு  ஸ்பெல் கட் செய்தார். இதில் இன்னொரு விஷயம் வாட்சன் ரியாஸீன் பந்துகளில் தடுமாறி ஒரு புல் ஷாட்  அடித்து கொடுத்த கேட்ச்சை  கோட்டை விட்டார் அவரது சக பவுலர். அதற்கப்புறம் மேக்ஸ் வெல் கொடுத்த கேட்ச்சும் கோட்டை விடப் பட்டது.

        நிறைய பீல்டிங்க் ஓட்டைகள்! எனவே எளிதாக வென்றுவிட்டது ஆஸ்திரேலியா. ஆனால் நங்கூரமாக நின்ற ஸ்டீவன் ஸ்மித்தினை பாராட்ட வேண்டும்.
         
     ஆஸ்திரேலியாவின் வேகப்பந்தினை நம்மவர்கள் சமாளித்து   ஒரு முன்னூறை எட்டினால் அவர்களை சாய்த்துவிடலாம் என்றே தோன்றுகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானின் வலுவில்லாத பீல்டிங் வியுகத்திலேயே அவர்கள் தடுமாறினார்கள். ஸ்மித் தவிர மற்ற வீரர்கள் அதிரடி ஆட்டக்காரர்களே தவிர  பாண்டிங், பெவன், கிளார்க் போன்று தொழில்நுட்பத் திறமை வாய்ந்தவர்கள்  அல்ல. எனவே இவர்களை சாய்த்து விடலாம் என்றே தோன்றுகிறது.


    இன்றைய போட்டியில் வஹாப் ரியாஸ், வாட்சன்  மோதல் சுவாரஸ்யமாக  இருந்தது. நேற்று  ரூபல் ஹொசைன் கோலியை சீண்டினார். இது போன்ற சீண்டல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் அதிகமானால் தண்டனை கிடைக்கும். மேலும் வாய் மோதலை விட  பந்துவீச்சு  அல்லது பேட்டிங்கில் பேசுவதுதான் இந்தியர்களுக்கு மிகவும் பிடிக்கும். 
     எனது கணிப்பின் படி நியுசிலாந்துடன் இந்தியா பைனலில் மோதும் என்று தோன்றுகிறது.  பார்ப்போம்!

Comments

  1. இந்தியா வெல்லட்டும்.

    ReplyDelete
  2. பாகிஸ்தான் பல க்ளுக்களை தந்து உள்ளார்கள்...

    ReplyDelete
  3. சுரேஷ் ஜி ..உங்கள் நம்பிக்கை வீண் போகாது இந்தியா வெல்லும் :)

    ReplyDelete
  4. சுரேஷ் ஜி ..உங்கள் நம்பிக்கை வீண் போகாது இந்தியா வெல்லும் :)

    ReplyDelete
  5. பொதுவாகவே இந்தியாவும் நியுசிலாந்தும் தான் இறுதியில் மோதும் எனபது வல்லுனர்கள் மற்றும் சூதாட்ட கோஷ்டியின் கணிப்பு.

    பார்ப்போம்.

    ReplyDelete
  6. good review. Misba-Ul-Haq may be a good batsman, but not a good Manager!!

    ReplyDelete
  7. நல்ல அலசல். இந்தியா ஓவர் கான்பிடன்ஸ் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஆசியை வீழ்த்த கூட்டுமுயற்சி அவசியம். இந்தியர்கள் உட்பட பலரும் இந்தியாவை குறைவாகவே மதிபிட்டனர்.பந்து வீச்சிலும் ஃபீல்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம். பார்ப்போம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!