தளிர் ஹைக்கூ கவிதைகள்!


    அடிபட்டதும் வீட்டைவிட்டு
    வெளியேறின இலைகள்!
    காற்று!


     கலப்புத் திருமணம்!
     ஒட்டிக்கொண்டன!
    சிமெண்ட்  - மணல்!


      பூத்தும் மணக்கவில்லை!
       வானில்
     நட்சத்திரங்கள்!


       பால் செழித்தும்
       பசியில்மெலிந்தது கன்று!
       வியாபாரம்!


       மறைந்ததும்
       மகிழ்ந்தார்கள்!
      மாலைச்சூரியன்!


      கரையேறத் துடிக்கையில்
      கைதட்டி ரசிப்பு!
      கடல் அலை!

      முழுங்கிக் கொண்டிருக்கிறது
      முழுதாய் உணரவில்லை!
       நேரம்!

     
        தூண்டிலில் சிக்கும்வரை
        சுதந்திரமாய் இருக்கிறது
         மீன்கள்!

       
        வலையில் சிக்காதவை
        வலையில் சிக்கின!
          விண்மீன்கள்!


        ஓசை இசையானது!
         தலையசைத்து ரசித்தன புற்கள்!
          காற்று!


        நிழல் தேடி
       மலையில் மறைந்தது
       சூரியன்!

       ஆடிக் களைத்ததும்
       ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது ஊஞ்சல்!
        குழந்தைகள்!
     

      உப்பு மூட்டை
      இனித்தது!
     குழந்தை!

    குழந்தைகளோடு
   கூடப்பிறக்கின்றன!
    குறும்புகள்!

      மழை நின்றதும்
      குடைவிரித்தது
       காளான்!

   புகுந்த வீட்டில்
   விளக்கேற்றின
    மின்மினிகள்!

    
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!     


         

      

           

Comments

  1. அனைத்தும் ஸூப்பரோ ஸூப்பர் சுரேஷ் அவர்களே...

    ReplyDelete
  2. அனைத்துமே அருமையாக உள்ள நிலையில் இதுதான் சிறப்பானது என்று பிரித்துக்கூறவியலா நிலையைக் காணமுடிகிறது.

    ReplyDelete
  3. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை சுரேஷ் நண்பரே!

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை.
    அதிலும் அந்த வியாபாரம் - நெஞ்சைத் தொட்டது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!